• Jan 24 2025

யாழில் ஆரம்பமான சர்வதேச வர்த்தக கண்காட்சி!

Chithra / Jan 24th 2025, 2:21 pm
image


யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில், 15வது ஆண்டாக இடம்பெறும் யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது "பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில்" எனும் தொனிப்பொருளுடன் இன்று யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் காலை 11 மணியளவில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டு உத்தியோகபூர்வ கண்காட்சியினை திறந்துவைத்தார்.

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பல்வேறுபட்ட வழங்குனர்களால் 350க்கு மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயம், தொழில்நுட்பம், விருந்தோம்பல், கல்வி, உணவு , நவநாகரிகம் மற்றும் இதர தொழிற்துறைகள் என பல்வேறுபட்ட வர்த்தக நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தி, விற்பனை செய்யப்படுகின்றன.

தொழிற்துறைகள் திணைக்களத்திற்கு, 40 வரையான நுண்ணிய சிறிய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்காக 10 காட்சிக் கூடங்கள் அமைப்பதற்கான இலவச இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளது. 

மாலைவேளை சிறுவர்களை மகிழ்சியூட்டும் நோக்குடன் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு களியாட்ட நிகழ்வுகளும் இம்முறை விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியானது இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 25 மற்றும் 26 திகதிகளிலும் இடம்பெறும்.

யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் தலைவர் சபாரட்ணம், யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக (காணி)அரச அதிபர் எஸ். ஸ்ரீமோகன், யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ம.கிருஷ்ணேந்திரன், மன்றத்தின் செயற்றிட்ட உறுப்பினர்கள், கண்காட்சிக் குழவினர்கள், எற்பாட்டாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், பார்வையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


யாழில் ஆரம்பமான சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில், 15வது ஆண்டாக இடம்பெறும் யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது "பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில்" எனும் தொனிப்பொருளுடன் இன்று யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் காலை 11 மணியளவில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டு உத்தியோகபூர்வ கண்காட்சியினை திறந்துவைத்தார்.யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பல்வேறுபட்ட வழங்குனர்களால் 350க்கு மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.விவசாயம், தொழில்நுட்பம், விருந்தோம்பல், கல்வி, உணவு , நவநாகரிகம் மற்றும் இதர தொழிற்துறைகள் என பல்வேறுபட்ட வர்த்தக நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தி, விற்பனை செய்யப்படுகின்றன.தொழிற்துறைகள் திணைக்களத்திற்கு, 40 வரையான நுண்ணிய சிறிய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்காக 10 காட்சிக் கூடங்கள் அமைப்பதற்கான இலவச இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மாலைவேளை சிறுவர்களை மகிழ்சியூட்டும் நோக்குடன் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு களியாட்ட நிகழ்வுகளும் இம்முறை விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியானது இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 25 மற்றும் 26 திகதிகளிலும் இடம்பெறும்.யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் தலைவர் சபாரட்ணம், யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக (காணி)அரச அதிபர் எஸ். ஸ்ரீமோகன், யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ம.கிருஷ்ணேந்திரன், மன்றத்தின் செயற்றிட்ட உறுப்பினர்கள், கண்காட்சிக் குழவினர்கள், எற்பாட்டாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், பார்வையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement