• May 17 2024

82 வீடுகள் சேதம்..!மூன்று வீடுகள் முழுமையாக சேதம்..!சுமார் 9ஆயிரம் பேர் நிர்க்கதி.! - இலங்கையில் அவலம்..! samugammedia

Sharmi / May 6th 2023, 1:19 pm
image

Advertisement

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் இதுவரையில் 9,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, பதுளையில் மழை மற்றும் பலத்த காற்றினால் 2,249 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் வெள்ளத்தினால் 2,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 71 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மூன்று வீடுகள் இடிந்துள்ளதுடன் 82 வீடுகள் சேதமடைந்துள்ளன.

82 வீடுகள் சேதம்.மூன்று வீடுகள் முழுமையாக சேதம்.சுமார் 9ஆயிரம் பேர் நிர்க்கதி. - இலங்கையில் அவலம். samugammedia நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் இதுவரையில் 9,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, பதுளையில் மழை மற்றும் பலத்த காற்றினால் 2,249 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கம்பஹா மாவட்டத்தில் வெள்ளத்தினால் 2,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 71 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.கடந்த சில நாட்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மூன்று வீடுகள் இடிந்துள்ளதுடன் 82 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement