• Dec 03 2024

பேஷன் அழகியாக மாறிய 85 வயது மூதாட்டி; வைரலாகும் புகைப்படங்கள்..!

Sharmi / Nov 23rd 2024, 11:59 am
image

கிழக்கு ஆபிரிக்காவின் ஜாம்பியாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த மார்கிரெட் சோலா என்ற 85 வயது மூதாட்டி ஒருவர் பேஷன் அழகியாக மாறி அனைவரையும் திகைப்படைய வைத்துள்ளார்.

இது தொட்ர்பில் மேலும் தெரியவருவதாவது,

மார்கரெட் சோலா என்ற அந்த மூதாட்டியின் பேத்தி நியூயார்க்கில் 'மேக்கப்' கலைஞராக திகழ்கின்றார்.

இந்நிலையில், அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த நாடான ஜாம்பியாவுக்கு வருகை தந்து தனது பாட்டியை சந்தித்தார். 

அப்போது பாட்டிக்கு நவநாகரீக உடைகளை விதம் விதமாக அணிவித்தும் புகைப்படங்களை எடுத்துள்ளார்.

குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியதுடன், குறித்த பாட்டிக்கு பிரபல ஹாலிவுட் இணைய தொடரிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

இந்நிலையில் மூதாட்டியின் பேத்தி இதனை அறிந்து தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.





பேஷன் அழகியாக மாறிய 85 வயது மூதாட்டி; வைரலாகும் புகைப்படங்கள். கிழக்கு ஆபிரிக்காவின் ஜாம்பியாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த மார்கிரெட் சோலா என்ற 85 வயது மூதாட்டி ஒருவர் பேஷன் அழகியாக மாறி அனைவரையும் திகைப்படைய வைத்துள்ளார்.இது தொட்ர்பில் மேலும் தெரியவருவதாவது,மார்கரெட் சோலா என்ற அந்த மூதாட்டியின் பேத்தி நியூயார்க்கில் 'மேக்கப்' கலைஞராக திகழ்கின்றார்.இந்நிலையில், அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த நாடான ஜாம்பியாவுக்கு வருகை தந்து தனது பாட்டியை சந்தித்தார். அப்போது பாட்டிக்கு நவநாகரீக உடைகளை விதம் விதமாக அணிவித்தும் புகைப்படங்களை எடுத்துள்ளார்.குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியதுடன், குறித்த பாட்டிக்கு பிரபல ஹாலிவுட் இணைய தொடரிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.இந்நிலையில் மூதாட்டியின் பேத்தி இதனை அறிந்து தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement