• Nov 28 2024

பொலிஸாரின் 'யுக்திய' வேட்டையில் மேலும் 863 சந்தேக நபர்கள் கைது...!samugammedia

Sharmi / Jan 12th 2024, 11:23 am
image

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒடுக்கும் 'யுக்திய' பொலிஸ் விஷேட  சுற்றிவளைப்பு நடவடிக்கையில்  கடந்த 24 மணித்தியாலங்களில் 863 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு  அறிவித்துள்ளது.


நேற்று நள்ளிரவு 12.30 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த சோதனையின் போது 303 கிராம் ஹெரோயின், 141 கிராம் ஐஸ் மற்றும் 10 கிலோ கஞ்சா ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதேவேளை, கடந்த இரு வாரங்களுக்கு மேலாக நாடளாவிய ரீதியில் 607 பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய வீதித் தடைகளில் பொலிஸ் நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.


குறித்த நடவடிக்கையின் போது ஏராளமான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான சந்தேக நபர்கள்  இது வரை கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


பொலிஸாரின் 'யுக்திய' வேட்டையில் மேலும் 863 சந்தேக நபர்கள் கைது.samugammedia நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒடுக்கும் 'யுக்திய' பொலிஸ் விஷேட  சுற்றிவளைப்பு நடவடிக்கையில்  கடந்த 24 மணித்தியாலங்களில் 863 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு  அறிவித்துள்ளது.நேற்று நள்ளிரவு 12.30 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சோதனையின் போது 303 கிராம் ஹெரோயின், 141 கிராம் ஐஸ் மற்றும் 10 கிலோ கஞ்சா ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை, கடந்த இரு வாரங்களுக்கு மேலாக நாடளாவிய ரீதியில் 607 பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய வீதித் தடைகளில் பொலிஸ் நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.குறித்த நடவடிக்கையின் போது ஏராளமான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான சந்தேக நபர்கள்  இது வரை கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement