• Apr 15 2026

கற்பிட்டி கடற்கரை பகுதியில் 907 கிலோ உலர்ந்த மஞ்சள் பறிமுதல்

Aathira / Apr 11th 2026, 12:02 pm
image

கற்பிட்டி பகுதியில் உள்ள பங்களவத்தை மற்றும் சேதவாத்தை கடற்கரைப் பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சுமார் 907 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள ‘விஜய’ கடற்படைக் கப்பலின் ஆலங்குடா துணைப் பிரிவினர் ஏப்ரல் 06 ஆம் திகதி பங்களவத்தை கடற்கரையில் மேற்கொண்ட சோதனையில் இரண்டு மூட்டைகளில் சுமார் 80 கிலோ மஞ்சள் மீட்டெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 07 ஆம் திகதி சேதவாத்தை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தேடுதல் நடவடிக்கையில் 16 மூட்டைகள் கண்டறியப்பட்டன. அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 827 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டது.

மொத்தமாக இரு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் 907 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


கற்பிட்டி கடற்கரை பகுதியில் 907 கிலோ உலர்ந்த மஞ்சள் பறிமுதல் கற்பிட்டி பகுதியில் உள்ள பங்களவத்தை மற்றும் சேதவாத்தை கடற்கரைப் பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சுமார் 907 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள ‘விஜய’ கடற்படைக் கப்பலின் ஆலங்குடா துணைப் பிரிவினர் ஏப்ரல் 06 ஆம் திகதி பங்களவத்தை கடற்கரையில் மேற்கொண்ட சோதனையில் இரண்டு மூட்டைகளில் சுமார் 80 கிலோ மஞ்சள் மீட்டெடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 07 ஆம் திகதி சேதவாத்தை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தேடுதல் நடவடிக்கையில் 16 மூட்டைகள் கண்டறியப்பட்டன. அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 827 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டது.மொத்தமாக இரு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் 907 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement