'அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்' திட்டத்தை செயற்படுத்துவதற்கான தேசிய ரீதியிலான கடற்கரையைச் சுத்தப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்
'க்ளீன் ஸ்ரீலங்கா' நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கடற்கரையினை சுத்தப்படுத்தல் நிகழ்வானது இன்றைய தினம் (23) காலை 7.30 மணி முதல் நண்பகல் 11.30 மணிவரை அந்தந்த பிரதேச செயலக ரீதியாக நடைபெற்றது.
பருத்தித்துறை பிரதேதச செயலக பிரிவில் உள்ள சக்கோட்டை கடற்கரைப்பகுதியின் 2 கி.மீ பகுதியை சுத்தம் செய்யும் நிகழ்வு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினரகளாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர், வட மாகாணப் கடற்படைகளின் பிரதித் தளபதி, பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆகியோரும் கெளரவ விருந்தினராக Save a life நிறைவேற்றுப் பணிப்பாளர் கலந்துகொண்டார்கள்.
மேலும் இந் மாவட்ட நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக பருத்தித்துறை உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கடற்கரையினைத் துப்பரவு செய்தார்கள்.
மேலும் இந் நிகழ்வின் சமநேரத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மொத்தமாக 50 கி.மீ கடற்கரையானது அந்தந்த பிரதேச செயலாளர்கள் தலைமையில் சுத்தம் செய்யப்படுள்ளது.
அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம் - கடற்கரையைச் சுத்தப்படுத்தல் 'அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்' திட்டத்தை செயற்படுத்துவதற்கான தேசிய ரீதியிலான கடற்கரையைச் சுத்தப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்'க்ளீன் ஸ்ரீலங்கா' நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கடற்கரையினை சுத்தப்படுத்தல் நிகழ்வானது இன்றைய தினம் (23) காலை 7.30 மணி முதல் நண்பகல் 11.30 மணிவரை அந்தந்த பிரதேச செயலக ரீதியாக நடைபெற்றது. பருத்தித்துறை பிரதேதச செயலக பிரிவில் உள்ள சக்கோட்டை கடற்கரைப்பகுதியின் 2 கி.மீ பகுதியை சுத்தம் செய்யும் நிகழ்வு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினரகளாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.மேலும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர், வட மாகாணப் கடற்படைகளின் பிரதித் தளபதி, பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆகியோரும் கெளரவ விருந்தினராக Save a life நிறைவேற்றுப் பணிப்பாளர் கலந்துகொண்டார்கள். மேலும் இந் மாவட்ட நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக பருத்தித்துறை உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கடற்கரையினைத் துப்பரவு செய்தார்கள். மேலும் இந் நிகழ்வின் சமநேரத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மொத்தமாக 50 கி.மீ கடற்கரையானது அந்தந்த பிரதேச செயலாளர்கள் தலைமையில் சுத்தம் செய்யப்படுள்ளது.