• Nov 15 2025

தோட்ட கிணற்றில் நீராட சென்ற சிறுவன் சடலமாக மீட்பு! வல்வெட்டித்துறையில் துயரச் சம்பவம்

Chithra / Nov 13th 2025, 6:53 pm
image


யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் குளிக்கச் சென்ற சிறுவனொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நிரேக்சன் என்ற 18 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.

ஐந்து வரையான சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதன்போது அனைவரும் கயிறு கட்டி நீராடியுள்ளனர். 

அதன் பின்னர் அனைவரும் வெளியேறிய நிலையில் ஒரு சிறுவன் மாத்திரம் தொடர்ந்து நீராடியுள்ளார்.

அவரை வருமாறு ஏனையவர்கள் அழைத்துள்ளனர். குறித்த சிறுவன் சிறிது நேரத்திற்கு பிறகு வருவதாக கூறியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் குறித்த சிறுவனை காணாததால் ஏனையவர்கள் மீண்டும் அங்கு சென்று பார்த்த போது கயிறு அறுந்த நிலையில் அங்கு சிறுவனை காணவில்லை.

ஏனையோரின் உதவியுடன் தோட்ட கிணற்றில் தேடியபோது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் தொடர்பான மரண விசாரணையை கரவெட்டி தீடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் மேற்கொண்டார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


தோட்ட கிணற்றில் நீராட சென்ற சிறுவன் சடலமாக மீட்பு வல்வெட்டித்துறையில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் குளிக்கச் சென்ற சிறுவனொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நிரேக்சன் என்ற 18 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.ஐந்து வரையான சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதன்போது அனைவரும் கயிறு கட்டி நீராடியுள்ளனர். அதன் பின்னர் அனைவரும் வெளியேறிய நிலையில் ஒரு சிறுவன் மாத்திரம் தொடர்ந்து நீராடியுள்ளார்.அவரை வருமாறு ஏனையவர்கள் அழைத்துள்ளனர். குறித்த சிறுவன் சிறிது நேரத்திற்கு பிறகு வருவதாக கூறியுள்ளார்.நீண்ட நேரமாகியும் குறித்த சிறுவனை காணாததால் ஏனையவர்கள் மீண்டும் அங்கு சென்று பார்த்த போது கயிறு அறுந்த நிலையில் அங்கு சிறுவனை காணவில்லை.ஏனையோரின் உதவியுடன் தோட்ட கிணற்றில் தேடியபோது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலம் தொடர்பான மரண விசாரணையை கரவெட்டி தீடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் மேற்கொண்டார்.உயிரிழந்த சிறுவனின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement