வெசாக் யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நேற்று இரவு அலதெனிய, யடிஹலகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பரிகம, கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
கொத்மலை, ரம்பொட, கெரண்டியெஎல்ல பகுதியில் அரச பேருந்து 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி 21 பேர் உயிரிழந்த துயரம் ஆற முன்னர் மற்றுமொரு பேருந்து விபத்து தொடர்பில் தகவல் வெளியாகி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து; 20 பேர் வைத்தியசாலையில் வெசாக் யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து நேற்று இரவு அலதெனிய, யடிஹலகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் பரிகம, கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.கொத்மலை, ரம்பொட, கெரண்டியெஎல்ல பகுதியில் அரச பேருந்து 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி 21 பேர் உயிரிழந்த துயரம் ஆற முன்னர் மற்றுமொரு பேருந்து விபத்து தொடர்பில் தகவல் வெளியாகி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.