• Jul 09 2025

ரஷ்ய சுற்றுலாப் பிரயாணிகளை ஏற்றி சென்ற கார்; மூதூரில் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபரீதம்

Chithra / Jul 9th 2025, 7:53 am
image


திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை (08) இரவு காரொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த குறித்த சொகுசுச் கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகாயுள்ளது.

விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. காரில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


ரஷ்ய சுற்றுலாப் பிரயாணிகளை ஏற்றி சென்ற கார்; மூதூரில் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபரீதம் திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை (08) இரவு காரொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த குறித்த சொகுசுச் கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகாயுள்ளது.விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. காரில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement