• May 17 2024

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பிரதமர் பதவியில் மாற்றம்? வெளியான தகவல் samugammedia

Chithra / May 14th 2023, 1:57 pm
image

Advertisement

உத்தேச ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வேண்டுமாயின், தேர்தலுக்கு முன்னர் பிரதமர் பதவியில் மாற்றம் வேண்டும் என்றும் அந்த பதவியை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் தேசிய தேர்தல்களை மையப்படுத்தி கூட்டணிகளை அமைப்பது குறித்து பிரதான கட்சிகள் செயற்பட தொடங்கியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் அரசியல் தீர்மானங்களை முன்னெடுத்து வருகிறது. பஷில் ராஜபக்ஷவும் இந்த விடயத்தை மையப்படுத்தி வெளிநாடு செல்வதற்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இந்த சந்திப்பின்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவை ரணிலுக்கு வழங்குவதாக பஷில் உறுதியளித்துள்ளார். ஆனால், பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகவே தேர்தலில் போட்டியிட்டால் நல்லது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஏனைய தரப்புகளையும் ஒன்றிணைக்கும் வகையில் தீர்மானங்களை எடுப்பதே சிறந்தது என்று இச்சந்திப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், புதிய கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் சிறுபான்மை அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய பரந்துபட்ட கூட்டணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை களமிறக்கும் நோக்கத்துடன் ஐக்கிய தேசிய கட்சி செயற்படுகிறது.

அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதன்போதே பிரதமர் பதவி குறித்தும் பேசப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவதாகவும், இதனூடாக ஜனாதிபதி தேர்தலில் முழுமையான ஆதரவை  பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கூடிய விரைவில் பிரதமர் பதவியை மையப்படுத்தி எழுத்து மூலமான கோரிக்கையை, ஜனாதிபதியை நேரில் சந்தித்து வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். 

எவ்வாறாயினும், இதுவரையில் குறித்த சந்திப்புகள் தொடர்பில் எவ்விதமான  உத்தியோகபூர்வ தகவல் எதுவும் வெளிவராத நிலையில், ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய அரசியல் கூட்டணி குறித்து கட்சிகள் தீவிரமாக செயற்பட தொடங்கியுள்ளன.


ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பிரதமர் பதவியில் மாற்றம் வெளியான தகவல் samugammedia உத்தேச ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வேண்டுமாயின், தேர்தலுக்கு முன்னர் பிரதமர் பதவியில் மாற்றம் வேண்டும் என்றும் அந்த பதவியை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் தேசிய தேர்தல்களை மையப்படுத்தி கூட்டணிகளை அமைப்பது குறித்து பிரதான கட்சிகள் செயற்பட தொடங்கியுள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் அரசியல் தீர்மானங்களை முன்னெடுத்து வருகிறது. பஷில் ராஜபக்ஷவும் இந்த விடயத்தை மையப்படுத்தி வெளிநாடு செல்வதற்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவை ரணிலுக்கு வழங்குவதாக பஷில் உறுதியளித்துள்ளார். ஆனால், பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகவே தேர்தலில் போட்டியிட்டால் நல்லது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஏனைய தரப்புகளையும் ஒன்றிணைக்கும் வகையில் தீர்மானங்களை எடுப்பதே சிறந்தது என்று இச்சந்திப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், புதிய கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.மறுபுறம் சிறுபான்மை அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய பரந்துபட்ட கூட்டணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை களமிறக்கும் நோக்கத்துடன் ஐக்கிய தேசிய கட்சி செயற்படுகிறது.அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போதே பிரதமர் பதவி குறித்தும் பேசப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவதாகவும், இதனூடாக ஜனாதிபதி தேர்தலில் முழுமையான ஆதரவை  பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கூடிய விரைவில் பிரதமர் பதவியை மையப்படுத்தி எழுத்து மூலமான கோரிக்கையை, ஜனாதிபதியை நேரில் சந்தித்து வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். எவ்வாறாயினும், இதுவரையில் குறித்த சந்திப்புகள் தொடர்பில் எவ்விதமான  உத்தியோகபூர்வ தகவல் எதுவும் வெளிவராத நிலையில், ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய அரசியல் கூட்டணி குறித்து கட்சிகள் தீவிரமாக செயற்பட தொடங்கியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement