யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இன்று பிற்பகல் இடம் பெற்ற மோதலில் ஒருவர் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதுடன், இன்னொருவர் மீது சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று காலை முச்சக்கர வண்டியில் பாண் விநியோகத்திற்கு சென்றுகொண்டிருந்த இளைஞனை வழிமறித்த ஒரு குழு அவ் இளைஞன் மீது வாளால் வெட்டியதாகவும், அதனை தொடர்ந்து குறித்த காயமடைந்த பாண் முச்சக்ககர வண்டியில் வியாபாரம் செய்யும் இஞைஞனின் தரப்பு வாளால் வெட்டியவர்களை நியாயம் கேட்க சென்ற போது அங்கு ஏற்பட்ட முரண்பாடுகளில் இஞைஞன் ஒருவன் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், பதிலுக்கு தாக்குதலுக்கு உள்ளான இஞைஞன் தரப்பை சேர்ந்த நால்வர் இஞைஞனை தாக்கியவர்களில் ஒருவருக்கு சரமாரியாக வாளால் வெட்டி படுகாயப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவளை அதிகாலையில் முச்சக்கர வண்டியில் பாண் வியாபரத்திற்க்கு சென்றபோது வாள் வெட்டுக்கு இலக்காகி சிறிய காயங்களுக்கு உள்ளானவரது வெதுப்பக உரிமையாளர் குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்தும் இதுவரை ஏந்தவிதமான நடவடிக்கைகளும் பொலீஸார் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இரு குழுக்களுக்கு இடையில் மோதல் - ஒருவர் மீது வாள் வெட்டு- இன்னொருவர் மீது சரமாரியான தாக்குதல்.Samugammedia யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இன்று பிற்பகல் இடம் பெற்ற மோதலில் ஒருவர் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதுடன், இன்னொருவர் மீது சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.படுகாயமடைந்த இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று காலை முச்சக்கர வண்டியில் பாண் விநியோகத்திற்கு சென்றுகொண்டிருந்த இளைஞனை வழிமறித்த ஒரு குழு அவ் இளைஞன் மீது வாளால் வெட்டியதாகவும், அதனை தொடர்ந்து குறித்த காயமடைந்த பாண் முச்சக்ககர வண்டியில் வியாபாரம் செய்யும் இஞைஞனின் தரப்பு வாளால் வெட்டியவர்களை நியாயம் கேட்க சென்ற போது அங்கு ஏற்பட்ட முரண்பாடுகளில் இஞைஞன் ஒருவன் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், பதிலுக்கு தாக்குதலுக்கு உள்ளான இஞைஞன் தரப்பை சேர்ந்த நால்வர் இஞைஞனை தாக்கியவர்களில் ஒருவருக்கு சரமாரியாக வாளால் வெட்டி படுகாயப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவளை அதிகாலையில் முச்சக்கர வண்டியில் பாண் வியாபரத்திற்க்கு சென்றபோது வாள் வெட்டுக்கு இலக்காகி சிறிய காயங்களுக்கு உள்ளானவரது வெதுப்பக உரிமையாளர் குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்தும் இதுவரை ஏந்தவிதமான நடவடிக்கைகளும் பொலீஸார் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.