• Jun 17 2024

திருமண நிகழ்வில் இரு குழுக்களுக்கிடையில் வெடித்த மோதல்; மூவர் வைத்தியசாலையில்..! இருவர் கைது

Chithra / May 26th 2024, 3:58 pm
image

Advertisement


பதுளை - தியத்தலாவை பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட  மோதலில் மூவர் பலத்த காயமடைந்துள்ளனர். 

இச் சம்பவம் இன்று  இடம்பெற்றதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் ஹல்துமுல்ல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், 

மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர்கள் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.   

திருமண நிகழ்வில் இரு குழுக்களுக்கிடையில் வெடித்த மோதல்; மூவர் வைத்தியசாலையில். இருவர் கைது பதுளை - தியத்தலாவை பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட  மோதலில் மூவர் பலத்த காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று  இடம்பெற்றதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்தவர்கள் ஹல்துமுல்ல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.   

Advertisement

Advertisement

Advertisement