• Mar 28 2026

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Chithra / Mar 27th 2026, 1:01 pm
image

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த தொடவெல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


முன்னதாக விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய, பிரதிவாதியான அமைச்சர் குமார ஜயக்கொடி நீதிமன்றத்தில் இன்று காலை முன்னிலையாகியிருந்தார்.


குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதன் பின்னர், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


அத்துடன், அவரது விரல் அடையாளங்களைப் பெற்று அது குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முன் விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்படவுள்ளது.


இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டின்படி, 2016 ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது, கொள்முதல் செயல்முறை ஒன்றின் ஊடாகத் தனியார் நிறுவனம் ஒன்றிற்குச் சலுகை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 8,859,708 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த தொடவெல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.முன்னதாக விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய, பிரதிவாதியான அமைச்சர் குமார ஜயக்கொடி நீதிமன்றத்தில் இன்று காலை முன்னிலையாகியிருந்தார்.குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதன் பின்னர், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.அத்துடன், அவரது விரல் அடையாளங்களைப் பெற்று அது குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முன் விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்படவுள்ளது.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டின்படி, 2016 ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது, கொள்முதல் செயல்முறை ஒன்றின் ஊடாகத் தனியார் நிறுவனம் ஒன்றிற்குச் சலுகை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 8,859,708 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement