• Mar 28 2026

இணையம் மூலம் பொருட்களை வாங்குவோருக்கு பொலிஸாரின் எச்சரிக்கை

Chithra / Mar 27th 2026, 1:16 pm
image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் இணையம் மூலம் பொருட்களை வாங்கும் போதும், பொதிச் சேவைகளைப் பெறும் போதும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸ்  எச்சரிக்கை விடுத்துள்ளது.


சந்தேகத்திற்குரிய இணைய இணைப்புகளை அழுத்துவதன் மூலம் உங்கள் வங்கி கணக்கிலுள்ள பணம் மற்றும் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இதனால் இணையத்தின் மூலம் பொருட்களை வாங்கும் போது அல்லது விரைவு பொதிச் சேவைகளைப் பெறும் போது கிடைக்கும் சந்தேகமான லிங்குகளை அழுத்துவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஒரு பொருளை ஓர்டர் செய்த பின்னர், தொடர்புடைய நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தகவல்களை உறுதிப்படுத்துங்கள்.


குறுஞ்செய்தி அல்லது Messenger மூலம் வரும் ‘Update your details’ போன்ற லிங்குகளை அழுத்தி உங்கள் வங்கி அட்டை விவரங்களை வழங்க வேண்டாம்.


அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போல உருவாக்கப்பட்ட போலி இணையதளங்கள் மூலம் பணத்தை திருட வாய்ப்பு உள்ளதாகவும் இலங்கை பொலிஸ்  தெரிவித்துள்ளது.


இணையம் மூலம் பொருட்களை வாங்குவோருக்கு பொலிஸாரின் எச்சரிக்கை தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் இணையம் மூலம் பொருட்களை வாங்கும் போதும், பொதிச் சேவைகளைப் பெறும் போதும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸ்  எச்சரிக்கை விடுத்துள்ளது.சந்தேகத்திற்குரிய இணைய இணைப்புகளை அழுத்துவதன் மூலம் உங்கள் வங்கி கணக்கிலுள்ள பணம் மற்றும் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதனால் இணையத்தின் மூலம் பொருட்களை வாங்கும் போது அல்லது விரைவு பொதிச் சேவைகளைப் பெறும் போது கிடைக்கும் சந்தேகமான லிங்குகளை அழுத்துவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒரு பொருளை ஓர்டர் செய்த பின்னர், தொடர்புடைய நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தகவல்களை உறுதிப்படுத்துங்கள்.குறுஞ்செய்தி அல்லது Messenger மூலம் வரும் ‘Update your details’ போன்ற லிங்குகளை அழுத்தி உங்கள் வங்கி அட்டை விவரங்களை வழங்க வேண்டாம்.அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போல உருவாக்கப்பட்ட போலி இணையதளங்கள் மூலம் பணத்தை திருட வாய்ப்பு உள்ளதாகவும் இலங்கை பொலிஸ்  தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement