எலிக்காய்ச்சல் நோய் பரவும் ஆபத்தான மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 17 நிர்வாக மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று முதல் சுகாதார அமைச்சகத்தால் கிட்டத்தட்ட 1,200 சுகாதார ஆய்வாளர்கள் (PHI) மற்றும் 3,500 குடும்ப சுகாதார செவிலியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நாடு முழுவதும் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பிரோசிஸ்) நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
அரச மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச மருந்தை உட்கொள்ளாத எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100 நோயாளிகள் ஆண்டுதோறும் இறக்கின்றனர்.
இந்த வருடத்தில் குருநாகல், கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் பதிவாகியுள்ளனர்.
நாட்டில் தீவிரமாக பரவும் நோய் 17 மாவட்டங்கள் அபாயத்தில் - சுகாதார அமைச்சு அதிரடி நடவடிக்கை எலிக்காய்ச்சல் நோய் பரவும் ஆபத்தான மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 17 நிர்வாக மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, இன்று முதல் சுகாதார அமைச்சகத்தால் கிட்டத்தட்ட 1,200 சுகாதார ஆய்வாளர்கள் (PHI) மற்றும் 3,500 குடும்ப சுகாதார செவிலியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு நாடு முழுவதும் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பிரோசிஸ்) நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.அரச மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச மருந்தை உட்கொள்ளாத எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100 நோயாளிகள் ஆண்டுதோறும் இறக்கின்றனர்.இந்த வருடத்தில் குருநாகல், கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் பதிவாகியுள்ளனர்.