• Nov 22 2024

கனடாவில் திடீரென பரவிய காட்டுத் தீ...! 6 ஆயிரம் பேர் வெளியேற்றம்...!

Sharmi / May 17th 2024, 9:43 am
image

கனடாவின் மேற்கு மாகாணம் அல்பெர்டா பகுதியில் நேற்றையதினம் காட்டுத்தீ பரவியதாக கனடா செய்திகள் தெரிவிக்கின்றன.

காற்று வீச்சு அதிகமாக இருந்த காரணத்தால் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ வேகமாக  பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்  தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு உலங்கு வானூர்திகள் மூலம் விரைந்து  தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை  தீப்பரவலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீகன் ஹில், அபசன்ட், பிரேரி கிரீக் உள்ளிட்ட நகரிலுள்ள சுமார் 6 ஆயிரம் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வானிலை மாற்றம் மிகவும் மோசமாக இருக்கும் என்று கனடாவின் வனத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்ததுடன் பலத்த காற்று வீசுவதால் தீயை அணைப்பது மிகவும் சிரமமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.


கனடாவில் திடீரென பரவிய காட்டுத் தீ. 6 ஆயிரம் பேர் வெளியேற்றம். கனடாவின் மேற்கு மாகாணம் அல்பெர்டா பகுதியில் நேற்றையதினம் காட்டுத்தீ பரவியதாக கனடா செய்திகள் தெரிவிக்கின்றன.காற்று வீச்சு அதிகமாக இருந்த காரணத்தால் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ வேகமாக  பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில்  தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு உலங்கு வானூர்திகள் மூலம் விரைந்து  தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.அதேவேளை  தீப்பரவலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீகன் ஹில், அபசன்ட், பிரேரி கிரீக் உள்ளிட்ட நகரிலுள்ள சுமார் 6 ஆயிரம் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வானிலை மாற்றம் மிகவும் மோசமாக இருக்கும் என்று கனடாவின் வனத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்ததுடன் பலத்த காற்று வீசுவதால் தீயை அணைப்பது மிகவும் சிரமமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement