• Apr 20 2026

தடைகளை உடைத்து சாதித்து காட்டிய சிறுமி-11 வயதில் நம்ப முடியாத யோகா திறமை!

Ziya / Feb 25th 2026, 5:50 pm
image

11 வயதுடைய மாணவி யோகா மற்றும் ஜிம்னாஸ்டிக் திறமைகளால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.


நுவரெலியா மாவட்டம், அக்கரபத்தனை அல்டோரா போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த மாணவி சசிகுமார் திருசிகா, அசாத்தியமான யோகா மற்றும் ஜிம்னாஸ்டிக் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறது. 


இவர் அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஏழாம் வகுப்பு கல்வி கற்கின்றார்.


தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து, அது போலவே தானும் செய்ய வேண்டும் என்ற ஆவலில் யாருடைய துணையுமின்றி யோகா கலையைப் பயின்றதாக அம்மாணவி தெரிவித்தார். 


தனது திறமையை பல்வேறு மேடைகளில் வெளிப்படுத்தி, பல நிறுவனங்களிடமிருந்து சான்றிதழ்களையும், பதக்கங்களையும், நினைவுச் சின்னங்களையும் அவர் பெற்றுள்ளார். 


இருப்பினும், வறுமை காரணமாக இந்த உயரிய கலையை உலகறியச் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், தொடர்ச்சியாகக் கற்று இதனைப் பலருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் அவர் குறிப்பிட்டார். 


பல வருடப் பயிற்சியின் பின்னர், யோகா கலையில் கடினமான சாகச ஆசனங்களையும், அதன் மூலம் தான் புதிதாக உருவாக்கிய நடனங்களையும் அவர் நிகழ்த்திக் காட்டி வருகிறார்.


எவ்வித வசதிகளும் இல்லாத நிலையில், தனது வீட்டில் உள்ள ஒரு மெத்தையை (Mattress) மட்டுமே பயன்படுத்தி அவர் இந்தச் சாகசங்களைப் பயின்றுள்ளார் என தெரிவித்தார்.


இவரது ஆர்வமும், உற்சாகமும், தனிப்பட்ட முயற்சியும் இளம் வயதிலிருந்தே யோகா மற்றும் ஜிம்னாஸ்டிக் திறமைகளை வெற்றிகரமாக வளர்க்கும் முன்மாதிரியாக அனைவருக்கும் ஊக்கம் தருகின்றது.

தடைகளை உடைத்து சாதித்து காட்டிய சிறுமி-11 வயதில் நம்ப முடியாத யோகா திறமை 11 வயதுடைய மாணவி யோகா மற்றும் ஜிம்னாஸ்டிக் திறமைகளால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.நுவரெலியா மாவட்டம், அக்கரபத்தனை அல்டோரா போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த மாணவி சசிகுமார் திருசிகா, அசாத்தியமான யோகா மற்றும் ஜிம்னாஸ்டிக் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறது. இவர் அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஏழாம் வகுப்பு கல்வி கற்கின்றார்.தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து, அது போலவே தானும் செய்ய வேண்டும் என்ற ஆவலில் யாருடைய துணையுமின்றி யோகா கலையைப் பயின்றதாக அம்மாணவி தெரிவித்தார். தனது திறமையை பல்வேறு மேடைகளில் வெளிப்படுத்தி, பல நிறுவனங்களிடமிருந்து சான்றிதழ்களையும், பதக்கங்களையும், நினைவுச் சின்னங்களையும் அவர் பெற்றுள்ளார். இருப்பினும், வறுமை காரணமாக இந்த உயரிய கலையை உலகறியச் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், தொடர்ச்சியாகக் கற்று இதனைப் பலருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் அவர் குறிப்பிட்டார். பல வருடப் பயிற்சியின் பின்னர், யோகா கலையில் கடினமான சாகச ஆசனங்களையும், அதன் மூலம் தான் புதிதாக உருவாக்கிய நடனங்களையும் அவர் நிகழ்த்திக் காட்டி வருகிறார்.எவ்வித வசதிகளும் இல்லாத நிலையில், தனது வீட்டில் உள்ள ஒரு மெத்தையை (Mattress) மட்டுமே பயன்படுத்தி அவர் இந்தச் சாகசங்களைப் பயின்றுள்ளார் என தெரிவித்தார்.இவரது ஆர்வமும், உற்சாகமும், தனிப்பட்ட முயற்சியும் இளம் வயதிலிருந்தே யோகா மற்றும் ஜிம்னாஸ்டிக் திறமைகளை வெற்றிகரமாக வளர்க்கும் முன்மாதிரியாக அனைவருக்கும் ஊக்கம் தருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement