• Nov 24 2024

நாடாளுமன்றத்தை பலவந்தமாக கைப்பற்ற முயற்சிக்கும் குழு; ரணில் நீண்ட காலம் அமைதியாக இருக்க முடியாது! எச்சரிக்கும் ருவான்

Chithra / Nov 7th 2024, 11:07 am
image


நாடாளுமன்றத்தை பலவந்தமாக கைப்பற்ற முயற்சிக்கும் குழுவொன்று அதிகாரைத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டியில் இறங்கியுள்ள நிலையில், எதிர்பாராத சவால்களை இலங்கை எதிர்கொள்ளும் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனநாயக முன்னணி வேட்பாளருமான ருவான் விஜேவர்தன  தெரிவித்தார்.

தெல்கொடவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நேற்று (06) உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்

நாடாளுமன்ற பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றி அறியாதவர்கள் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவது நாட்டை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளுவதாக தெரிவித்தார்.

நிச்சயமற்ற சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் இந்த நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேவைப்பாடு ஏற்படும் என்பதால் அவர் நீண்ட காலம் அமைதியாக இருக்க முடியாது என அவர் கூறினார்.

எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அனுபவம் வாய்ந்த குழு ஒன்று சபைக்குள் வர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தை பலவந்தமாக கைப்பற்ற முயற்சிக்கும் குழு; ரணில் நீண்ட காலம் அமைதியாக இருக்க முடியாது எச்சரிக்கும் ருவான் நாடாளுமன்றத்தை பலவந்தமாக கைப்பற்ற முயற்சிக்கும் குழுவொன்று அதிகாரைத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டியில் இறங்கியுள்ள நிலையில், எதிர்பாராத சவால்களை இலங்கை எதிர்கொள்ளும் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனநாயக முன்னணி வேட்பாளருமான ருவான் விஜேவர்தன  தெரிவித்தார்.தெல்கொடவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நேற்று (06) உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்நாடாளுமன்ற பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றி அறியாதவர்கள் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவது நாட்டை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளுவதாக தெரிவித்தார்.நிச்சயமற்ற சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் இந்த நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேவைப்பாடு ஏற்படும் என்பதால் அவர் நீண்ட காலம் அமைதியாக இருக்க முடியாது என அவர் கூறினார்.எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அனுபவம் வாய்ந்த குழு ஒன்று சபைக்குள் வர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement