அத்தியாவசியமான நேரத்தில் இலங்கைக்கு உதவியமை தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நாட்டைப் புரட்டிய டிட்வா புயலால் நாடு முழுவதும் ஏராளமான பாதிப்புக்கள் ஏற்பட்டன. இந்த நிலையில் நாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை நிவாரணங்களாகவும் பண உதவிகளையும் சக நாடுகள் வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் தான் அமெரிக்காவும் தனது பங்களிப்பை இலங்கைக்கு அளிக்கும் வகையில் நிவாரணங்களையும் டொலர்களையும் வழங்கியது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது உத்தியோகபூர்வ ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
தேவைப்படும் நேரத்தில் மீண்டும் எங்களுடன் நின்றதற்காக அமெரிக்காவிற்கும் ஜனாதிபதிக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விரைவான C-130 பயன்பாடுகளும் உடனடி $2 மில்லியன் அவசர உதவியும், பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களில் உறுதியாக வேரூன்றிய நமது நீடித்த கூட்டாண்மையின் வலிமையையும், நமது மக்களிடையேயான நெருங்கிய உறவுகளையும் பிரதிபலிக்கின்றன. என்று அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய நேரத்தில் உதவிய அமெரிக்க ஜனாதிபதிக்கு அநுர நன்றி தெரிவிப்பு அத்தியாவசியமான நேரத்தில் இலங்கைக்கு உதவியமை தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாட்டைப் புரட்டிய டிட்வா புயலால் நாடு முழுவதும் ஏராளமான பாதிப்புக்கள் ஏற்பட்டன. இந்த நிலையில் நாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை நிவாரணங்களாகவும் பண உதவிகளையும் சக நாடுகள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் தான் அமெரிக்காவும் தனது பங்களிப்பை இலங்கைக்கு அளிக்கும் வகையில் நிவாரணங்களையும் டொலர்களையும் வழங்கியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது உத்தியோகபூர்வ ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தேவைப்படும் நேரத்தில் மீண்டும் எங்களுடன் நின்றதற்காக அமெரிக்காவிற்கும் ஜனாதிபதிக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.விரைவான C-130 பயன்பாடுகளும் உடனடி $2 மில்லியன் அவசர உதவியும், பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களில் உறுதியாக வேரூன்றிய நமது நீடித்த கூட்டாண்மையின் வலிமையையும், நமது மக்களிடையேயான நெருங்கிய உறவுகளையும் பிரதிபலிக்கின்றன. என்று அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.