காலி ஹோமடோல தோட்ட எல்லையில் நபரொருவரை பலர் சேர்ந்து தாக்குவதோடு நாயை விட்டு கடிக்கச் செய்யும் கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
வட்டவளை தோட்டக் கம்பனியின் கீழ் உடுகம, ஹோமடோல தோட்டத்தில் பணிபுரியும் காமினி கின்ஸ்லி என்ற உத்தியோகத்தர் ஏனையோருடன் இணைந்து காலி ஹோமடோல தோட்ட எல்லையில் உள்ள படகெட்டிய பிரிவின் லைன் அறைகளில் வசிக்கும் தமிழ் இளைஞர் ஒருவரை பலருடன் இணைந்து கொடூரமாக தாக்கியுள்ளார்.
நபரின் சேட்டை கழற்றி நாயை கடிக்க விடுகின்றனர். நாய் பலமாக கடிப்பதோடு மட்டுமல்லாமல் குழுவாகச் சேர்ந்து அவரது தலையிலும் தாக்குகின்றனர்.கால்,கைகளை நீட்டி கதறும் போதிலும் நாய் விடாமல் கடிக்கின்றது. ஒருவர் காலால் உதைகின்றார். மேலும் சேர்ந்து கொடூரமாகத் தாக்குகின்றனர் .
அத்தோடு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த சம்பவத்திற்கு சமூக அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இளைஞனை நாயை விட்டு கடிக்கவிட்ட கொடூரச் சம்பவம் காலி ஹோமடோல தோட்ட எல்லையில் நபரொருவரை பலர் சேர்ந்து தாக்குவதோடு நாயை விட்டு கடிக்கச் செய்யும் கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதுவட்டவளை தோட்டக் கம்பனியின் கீழ் உடுகம, ஹோமடோல தோட்டத்தில் பணிபுரியும் காமினி கின்ஸ்லி என்ற உத்தியோகத்தர் ஏனையோருடன் இணைந்து காலி ஹோமடோல தோட்ட எல்லையில் உள்ள படகெட்டிய பிரிவின் லைன் அறைகளில் வசிக்கும் தமிழ் இளைஞர் ஒருவரை பலருடன் இணைந்து கொடூரமாக தாக்கியுள்ளார்.நபரின் சேட்டை கழற்றி நாயை கடிக்க விடுகின்றனர். நாய் பலமாக கடிப்பதோடு மட்டுமல்லாமல் குழுவாகச் சேர்ந்து அவரது தலையிலும் தாக்குகின்றனர்.கால்,கைகளை நீட்டி கதறும் போதிலும் நாய் விடாமல் கடிக்கின்றது. ஒருவர் காலால் உதைகின்றார். மேலும் சேர்ந்து கொடூரமாகத் தாக்குகின்றனர் .அத்தோடு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த சம்பவத்திற்கு சமூக அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.