• Feb 21 2025

செம்மனியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் - மறைக்க சதியா?

Chithra / Feb 14th 2025, 7:35 am
image


யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் அமைந்துள்ள அரியாலை சிந்துபாத் மயானத்தில் எலும்புக் கூடுகள் மீட்கப்படுவது பல்வேறு சந்தேகங்களையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

குறித்த மயானத்தில் நல்லூர் பிரதேச சபையினால் மின்தகன எரியூட்டி அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய மயானத்திற்குள் கிடங்குகள் வெட்டிய போது இந்த எலும்புக் கூடுகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

குறித்த மயானத்திற்குள் எரியூட்டி அமைப்பதற்காக  நல்லூர் பிரதேச சபையினால் ஒப்பந்ததாரர்களுக்கு   வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எரியூட்டி அமைப்பதற்காக கிடங்கு வெட்டிய போது மண்டையோடு உட்பட்ட மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து ஒப்பந்ததாரர்களால் நல்லூர் பிரதேச சபைக்கு இவ்விடயம் தெரிவிக்கப்ட்டது. 

இதன் தொடர்ச்சியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதே சபைச் செயலர் உள்ளிட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் இதனை பார்வையிட்டனர்.

இந் நிலையில் எலும்புகூடுகள் மனித எச்சங்களாக இருக்கலாம் அல்லது கிறிஸ்தவ  மனித எச்சங்களாக இருக்கலாம் எனச் சந்தேகித்த ஒப்பந்ததாரர்கள் தம்மால் தொடர்ந்தும்  பணியாற்ற முடியாது எனத் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து அந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்திய பிரதேச சபைச் செயலாளர் மயான அபிவிருத்தி சபையிடம் இது குறித்து தெரிவித்ததுடன் குறித்த ஒப்பந்தத்தின் தொடர் பணிகளை முன்னெடுக்குமாறு கேட்டுள்ளார்.

இந்த எலும்பு கூடுகள் எப்படி எங்கிருத்து வந்தது என்பது தொடர்பில் பலரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.


செம்மனியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் - மறைக்க சதியா யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் அமைந்துள்ள அரியாலை சிந்துபாத் மயானத்தில் எலும்புக் கூடுகள் மீட்கப்படுவது பல்வேறு சந்தேகங்களையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,குறித்த மயானத்தில் நல்லூர் பிரதேச சபையினால் மின்தகன எரியூட்டி அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதற்கமைய மயானத்திற்குள் கிடங்குகள் வெட்டிய போது இந்த எலும்புக் கூடுகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.குறித்த மயானத்திற்குள் எரியூட்டி அமைப்பதற்காக  நல்லூர் பிரதேச சபையினால் ஒப்பந்ததாரர்களுக்கு   வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய எரியூட்டி அமைப்பதற்காக கிடங்கு வெட்டிய போது மண்டையோடு உட்பட்ட மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.இதனையடுத்து ஒப்பந்ததாரர்களால் நல்லூர் பிரதேச சபைக்கு இவ்விடயம் தெரிவிக்கப்ட்டது. இதன் தொடர்ச்சியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதே சபைச் செயலர் உள்ளிட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் இதனை பார்வையிட்டனர்.இந் நிலையில் எலும்புகூடுகள் மனித எச்சங்களாக இருக்கலாம் அல்லது கிறிஸ்தவ  மனித எச்சங்களாக இருக்கலாம் எனச் சந்தேகித்த ஒப்பந்ததாரர்கள் தம்மால் தொடர்ந்தும்  பணியாற்ற முடியாது எனத் தெரிவித்திருந்தனர்.இதனையடுத்து அந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்திய பிரதேச சபைச் செயலாளர் மயான அபிவிருத்தி சபையிடம் இது குறித்து தெரிவித்ததுடன் குறித்த ஒப்பந்தத்தின் தொடர் பணிகளை முன்னெடுக்குமாறு கேட்டுள்ளார்.இந்த எலும்பு கூடுகள் எப்படி எங்கிருத்து வந்தது என்பது தொடர்பில் பலரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement