• May 17 2024

நத்தார் தினத்தில் இடம்பெற்ற திகில் சம்பவம் - கொத்தாக புதைந்து போன மக்கள்!

Tamil nila / Dec 26th 2022, 4:18 pm
image

Advertisement

ஒஸ்ரியாவில் நத்தார் தினத்தன்று பனிச்சறுக்கு களியாட்ட இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 பேர் புதையுண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


ஒஸ்ரியாவின் " லே " மற்றும் ஜீயஸ் மலை கிராமங்களில் இந்த பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. 100 பேர்கள் கொண்ட குழு, புதையுண்டவர்களைத் தேடும் பணியில் தற்போது  தீவிரமாக களமிறக்கப்பட்டுள்ளனர்.



மேலும், தேடுதல் நடவடிக்கைக்காக தலையில் அணிந்துகொள்ளும் விளக்குகளுக்கு மீட்புப் பணியில் ஈடுபடுவோர் கோரியுள்ளனர். தொடர்ந்து தேடுதல் மேற்கொள்ள இது உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.


மாயமானவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படும் எனவும் லே நகராட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.



அந்நாட்டு நேரப்படி சுமார் 3 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டுள்ளார். 10 பேர் புதைந்து போயுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


மேலும், இந்த சம்பவத்திற்கு பின்னர் பனிச்சறுக்கு களியாட்டப் பகுதி மூடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இன்று அடுத்தகட்ட அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நத்தார் தினத்தில் இடம்பெற்ற திகில் சம்பவம் - கொத்தாக புதைந்து போன மக்கள் ஒஸ்ரியாவில் நத்தார் தினத்தன்று பனிச்சறுக்கு களியாட்ட இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 பேர் புதையுண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.ஒஸ்ரியாவின் " லே " மற்றும் ஜீயஸ் மலை கிராமங்களில் இந்த பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. 100 பேர்கள் கொண்ட குழு, புதையுண்டவர்களைத் தேடும் பணியில் தற்போது  தீவிரமாக களமிறக்கப்பட்டுள்ளனர்.மேலும், தேடுதல் நடவடிக்கைக்காக தலையில் அணிந்துகொள்ளும் விளக்குகளுக்கு மீட்புப் பணியில் ஈடுபடுவோர் கோரியுள்ளனர். தொடர்ந்து தேடுதல் மேற்கொள்ள இது உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.மாயமானவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படும் எனவும் லே நகராட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.அந்நாட்டு நேரப்படி சுமார் 3 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டுள்ளார். 10 பேர் புதைந்து போயுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும், இந்த சம்பவத்திற்கு பின்னர் பனிச்சறுக்கு களியாட்டப் பகுதி மூடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இன்று அடுத்தகட்ட அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement