• Apr 28 2025

ஒரு தொகை போதைப்பொருட்கள் இன்று அழிப்பு

Chithra / Apr 28th 2025, 9:29 am
image

  

ஒரு தொகைப் போதைப்பொருட்கள் இன்று திங்கட்கிழமை (28) அழிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்திட்சகருமான புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.  

நாடளாவிய ரீதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்டு, வழக்கு விசாரணைகள் நிறைவுபெற்ற 494 கிலோ 48 கிராம் ஹெராயின் போதைப்பொருட்களே இன்றைய தினம் அழிக்கப்படவுள்ளன. 

புத்தளம், பாலவி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான எரியூட்டியில் குறித்த போதைப் பொருட்களை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அழிக்கப்படவுள்ள போதைப்பொருட்கள் புத்தளம், பாலவி பகுதிக்கு கடுமையான பாதுகாப்பின் கீழ் கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஒரு தொகை போதைப்பொருட்கள் இன்று அழிப்பு   ஒரு தொகைப் போதைப்பொருட்கள் இன்று திங்கட்கிழமை (28) அழிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்திட்சகருமான புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.  நாடளாவிய ரீதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்டு, வழக்கு விசாரணைகள் நிறைவுபெற்ற 494 கிலோ 48 கிராம் ஹெராயின் போதைப்பொருட்களே இன்றைய தினம் அழிக்கப்படவுள்ளன. புத்தளம், பாலவி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான எரியூட்டியில் குறித்த போதைப் பொருட்களை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அழிக்கப்படவுள்ள போதைப்பொருட்கள் புத்தளம், பாலவி பகுதிக்கு கடுமையான பாதுகாப்பின் கீழ் கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement