சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா உயிரியல் பூங்காவில் சஃபாரி பேருந்தில் பயணம் செய்யும் போது அங்கிருந்த சிறுத்தை திடீரென பேருந்தில் ஏறி குதித்து, அவரது கையை கடித்துள்ளது.
கர்நாடகாவின் பன்னார்கட்டா தேசிய பூங்காவில் நேற்று வியாழக்கிழமை வழக்கமான சஃபாரி சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு திகிலூட்டும் அனுபவமாக மாறியுள்ளது.
அதன்படி பூங்காவில் பார்வையாளர்களுடன் சென்ற பேருந்தின் ஜன்னல் மீது எதிர்பாராத விதமாக சிறுத்தை ஒன்று ஏற முயன்றது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான பார்வையாளர்கள், அச்சத்தில் கூச்சலிட்டனர்.
சிறுத்தை ஒரு ஜன்னல் வழியாக பெண் ஒருவரின் ஆடையின் ஒரு பகுதியை கடித்து இழுத்துள்ளது.
அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை சண்டையிலிருந்து விடுவிக்க முயற்சிக்கும்போது சிறுத்தை துணியை இழுத்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையில் இருந்து தனது குடும்பத்தினருடன் பயணம் செய்த 50 வயதுடைய பெண் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். சம்பவம் நடந்த நேரத்தில் சஃபாரி வாகனத்தில் 15க்கும் மேற்ப்பட்ட சுற்றுலாப் பயணிகள் இருந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேருந்தின் ஜன்னல் மீது ஏறி பெண்ணின் கையை கடித்த சிறுத்தை - திகிலூட்டிய சஃபாரி பயணம் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா உயிரியல் பூங்காவில் சஃபாரி பேருந்தில் பயணம் செய்யும் போது அங்கிருந்த சிறுத்தை திடீரென பேருந்தில் ஏறி குதித்து, அவரது கையை கடித்துள்ளது. கர்நாடகாவின் பன்னார்கட்டா தேசிய பூங்காவில் நேற்று வியாழக்கிழமை வழக்கமான சஃபாரி சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு திகிலூட்டும் அனுபவமாக மாறியுள்ளது. அதன்படி பூங்காவில் பார்வையாளர்களுடன் சென்ற பேருந்தின் ஜன்னல் மீது எதிர்பாராத விதமாக சிறுத்தை ஒன்று ஏற முயன்றது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான பார்வையாளர்கள், அச்சத்தில் கூச்சலிட்டனர். சிறுத்தை ஒரு ஜன்னல் வழியாக பெண் ஒருவரின் ஆடையின் ஒரு பகுதியை கடித்து இழுத்துள்ளது. அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை சண்டையிலிருந்து விடுவிக்க முயற்சிக்கும்போது சிறுத்தை துணியை இழுத்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையில் இருந்து தனது குடும்பத்தினருடன் பயணம் செய்த 50 வயதுடைய பெண் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். சம்பவம் நடந்த நேரத்தில் சஃபாரி வாகனத்தில் 15க்கும் மேற்ப்பட்ட சுற்றுலாப் பயணிகள் இருந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.