வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியானது ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள எதிரணியின் பேரணி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நவம்பர் 21 ஆம் திகதி பேரணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும். இது ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
ஏனெனில் அடுத்த தேர்தலின்போது நாட்டு மக்கள் நிச்சயம் இந்த ஆட்சியைக் கவிழ்ப்பார்கள்.
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதே பேரணியின் பிரதான நோக்கம்.
போதை ஒழிப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது. எனினும், போதை ஒழிப்பு என்ற போர்வையில் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதியை மறந்து செயற்படுவது ஏற்புடையது அல்ல." - என்றார்.
நுகேகொடை போராட்டம் ஆட்சிக் கவிழ்ப்புக்கான பேரணி அல்ல மொட்டுவின் முக்கியஸ்தர் வீரசேகர தெரிவிப்பு வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியானது ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள எதிரணியின் பேரணி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"நவம்பர் 21 ஆம் திகதி பேரணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும். இது ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.ஏனெனில் அடுத்த தேர்தலின்போது நாட்டு மக்கள் நிச்சயம் இந்த ஆட்சியைக் கவிழ்ப்பார்கள்.வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதே பேரணியின் பிரதான நோக்கம்.போதை ஒழிப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது. எனினும், போதை ஒழிப்பு என்ற போர்வையில் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதியை மறந்து செயற்படுவது ஏற்புடையது அல்ல." - என்றார்.