லொறி ஒன்று கார் மீது மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தின் புறநகர் சாலையில் 7 பேர் காரில் பயணித்தனர். அவர்கள் சென்ற கார் சோன்காம்ப் கிராமத்திற்கு அருகே நள்ளிரவில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வேகமாக மோதியுள்ளது.
இதில் காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்தவர்கள் அப்பகுதி மக்களால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். அத்துடன் மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளதுடன், லொறியை இயக்கிய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்கள் அஜய் தஷ்ரத் சிக்லே (45), விட்டல் திகம்பர் தோட் (45), சுதாகர் ராம் சந்திர மான்கர் (42), ரமேஷ் ஓம்கார் ஹெலோண்டே (48), மயூர் மோரேஷ்வர் இங்கிள் (26), வைபவ் சாஹெப்ராவ் சிக்லே (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கார் மீது லொறி மோதி பயங்கர விபத்து 6 பேர் உயிரிழப்பு .Samugammedia லொறி ஒன்று கார் மீது மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தின் புறநகர் சாலையில் 7 பேர் காரில் பயணித்தனர். அவர்கள் சென்ற கார் சோன்காம்ப் கிராமத்திற்கு அருகே நள்ளிரவில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வேகமாக மோதியுள்ளது.இதில் காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்தவர்கள் அப்பகுதி மக்களால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். அத்துடன் மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளதுடன், லொறியை இயக்கிய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர்கள் அஜய் தஷ்ரத் சிக்லே (45), விட்டல் திகம்பர் தோட் (45), சுதாகர் ராம் சந்திர மான்கர் (42), ரமேஷ் ஓம்கார் ஹெலோண்டே (48), மயூர் மோரேஷ்வர் இங்கிள் (26), வைபவ் சாஹெப்ராவ் சிக்லே (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.