• Nov 22 2024

யாழில், மதுவினால் ஏற்பட்ட முரண்பாடு - மனைவி தனக்கு தானே தீ மூட்டி உயிரிழப்பு..!Samugammedia

Tamil nila / Dec 16th 2023, 9:56 pm
image

வாய்த்தர்க்கம் முற்றியதால் மனைவி தனக்கு தானே தீ மூட்டிய நிலையில் உயிரிழந் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

கணவனை மது அருந்த வேண்டாம் என கண்டித்த நிலையில் கணவன் மது அருந்தியதால் மனைவி தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் தர்சினி (வயது 41) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் மதுப் பழக்கம் உடையவர். இந்நிலையில் அவரை மது அருந்த வேண்டாம் என மனைவி கண்டித்துள்ளார். அவர் தொடர்ந்தும் மது அருந்தியதால் கடந்த 7ஆம் திகதி குறித்த பெண் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார்.

இதன்போது அவரை காப்பாற்றிய ஊரவர்கள் யாழ்ப்மாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



யாழில், மதுவினால் ஏற்பட்ட முரண்பாடு - மனைவி தனக்கு தானே தீ மூட்டி உயிரிழப்பு.Samugammedia வாய்த்தர்க்கம் முற்றியதால் மனைவி தனக்கு தானே தீ மூட்டிய நிலையில் உயிரிழந் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவதுகணவனை மது அருந்த வேண்டாம் என கண்டித்த நிலையில் கணவன் மது அருந்தியதால் மனைவி தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் தர்சினி (வயது 41) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.குறித்த பெண்ணின் கணவர் மதுப் பழக்கம் உடையவர். இந்நிலையில் அவரை மது அருந்த வேண்டாம் என மனைவி கண்டித்துள்ளார். அவர் தொடர்ந்தும் மது அருந்தியதால் கடந்த 7ஆம் திகதி குறித்த பெண் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார்.இதன்போது அவரை காப்பாற்றிய ஊரவர்கள் யாழ்ப்மாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement