ஹட்டன் புகையிரத நிலையத்தில் புகையிரதத்திற்காக காத்திருந்த நபர் ஒருவர் நேற்றையதினம்(12) திடீரென உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஹட்டன் புகையிரத நிலையத்தில் பயணம் செய்ய காத்திருந்த நபர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்து இருந்தவாறு உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து ஹட்டன் பொலிசார் அங்கு சென்று சோதனையிட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஹட்டன் புகையிரத நிலையத்தில் பயணம் செய்ய காத்திருந்த நபர் கதிரையில் அமர்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அந்த நபர் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 45 வயதான அன்டன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.
புகையிரதத்திற்காக காத்திருந்த நபர் திடீர் மரணம்.ஹட்டனில் சம்பவம். ஹட்டன் புகையிரத நிலையத்தில் புகையிரதத்திற்காக காத்திருந்த நபர் ஒருவர் நேற்றையதினம்(12) திடீரென உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஹட்டன் புகையிரத நிலையத்தில் பயணம் செய்ய காத்திருந்த நபர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்து இருந்தவாறு உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து ஹட்டன் பொலிசார் அங்கு சென்று சோதனையிட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். ஹட்டன் புகையிரத நிலையத்தில் பயணம் செய்ய காத்திருந்த நபர் கதிரையில் அமர்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அந்த நபர் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 45 வயதான அன்டன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.