• Dec 26 2024

பிரதமர் ஹரினி மற்றும் நீதித்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பு !

Tharmini / Nov 6th 2024, 4:28 pm
image

நீதித்துறை அமைச்சு மற்றும் குறித்த அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பில் குறித்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பு நேற்று (05) பிற்பகல் நீதித்துறை அமைச்சில் இடம்பெற்றது. 

இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பகுப்பாய்வு அறிக்கையை வழங்கும் திறனை அதிகரித்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. 

சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, நீதித்துறை, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளுராட்சி மன்றம் மற்றும் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக பண்டார, சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜனசேன, சட்ட வரைவாளர் ஜனாதிபதி சட்டத்தரணி தில்ருக்ஷி சமரஜீவ, அரச இரசாயன பகுப்பாய்வாளர் சந்த்யா ராஜபக்ஷ, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெணிய, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுப்பெற்ற) தர்ஷன ஹெட்டியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகளும் அமைச்சின் உயர் அதிகாரிகள்  மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் பிரதானிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஹரினி மற்றும் நீதித்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பு நீதித்துறை அமைச்சு மற்றும் குறித்த அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பில் குறித்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார். இந்த சந்திப்பு நேற்று (05) பிற்பகல் நீதித்துறை அமைச்சில் இடம்பெற்றது. இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பகுப்பாய்வு அறிக்கையை வழங்கும் திறனை அதிகரித்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, நீதித்துறை, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளுராட்சி மன்றம் மற்றும் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக பண்டார, சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜனசேன, சட்ட வரைவாளர் ஜனாதிபதி சட்டத்தரணி தில்ருக்ஷி சமரஜீவ, அரச இரசாயன பகுப்பாய்வாளர் சந்த்யா ராஜபக்ஷ, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெணிய, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுப்பெற்ற) தர்ஷன ஹெட்டியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகளும் அமைச்சின் உயர் அதிகாரிகள்  மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் பிரதானிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement