• Dec 09 2024

பூநகரியில் மோட்டார் சைக்கிளும் கப் வாகனம் நேருக்கு நேர் மோதி கோர விபத்து...! இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்...! மூவர் படுகாயம்...!

Sharmi / Jul 6th 2024, 3:39 pm
image

பரந்தன் பகுதியில் இருந்து பூநகரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று(06) காலை  இடம்பெற்ற குறித்த விபத்தில் கிளிநொச்சி கோனாவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக  கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த விபத்தில் கப் ரக  வாகனததில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






பூநகரியில் மோட்டார் சைக்கிளும் கப் வாகனம் நேருக்கு நேர் மோதி கோர விபத்து. இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம். மூவர் படுகாயம். பரந்தன் பகுதியில் இருந்து பூநகரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.இன்று(06) காலை  இடம்பெற்ற குறித்த விபத்தில் கிளிநொச்சி கோனாவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக  கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதேவேளை குறித்த விபத்தில் கப் ரக  வாகனததில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement