• Oct 14 2026

யாழில் நடந்த கோரம்; சம்பவ இடத்திலேயே பறிபோன இரு இளைஞர்களின் உயிர்கள்!

Chithra / Oct 13th 2026, 4:00 pm
image


யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் இன்று (13) நண்பகல் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.


கைதடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் வீதிக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


விபத்தின் தாக்கத்தால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்த இளைஞர்களின் அடையாளங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.


இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கைதடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் நடந்த கோரம்; சம்பவ இடத்திலேயே பறிபோன இரு இளைஞர்களின் உயிர்கள் யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் இன்று (13) நண்பகல் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.கைதடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் வீதிக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.விபத்தின் தாக்கத்தால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த இளைஞர்களின் அடையாளங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கைதடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement