திருகோணமலை விடுதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சமூக கலை நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை திருகோணமலை பிரதான கடற்கரையில் இடம்பெறவுள்ளது.
திருகோணமலை விடுதிகள் சங்கத்தின் தலைவர் குமார் ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு அனுமதி முற்றுமுழுதாக இலவசம் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதில் மாபெரும் நிகழ்வில், சிறப்பு நிகழ்வாக இலங்கை இசைக் கலைஞர்களுடன் தமிழக இசைக் கலைஞர்களும் இணைந்து சிறப்பிக்கும் இன்னிசைத் திருவிழா, உணவுத் திருவிழா, மற்றும் கார்ணிவேல் என்பன இடம்பெறவுள்ளது.
விசேடமாக இங்கு நடைபெறவுள்ள “கான மழை “ இசை நிகழ்வில் , “காசு பணம் துட்டு மணி மணி “ பாடல் பிரபலம் கானா பாலா உட்பட பல பல தென்னிந்திய இசைக் கலைஞர்களும் இணைந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த இன்னிசை நிகழ்வில் இந்தியாவின் எம் மியூசிக் மாரிக் விஜயின் இசைக் குழுவினரும் இணைந்து கொள்கின்றனர்.
குறித்த நிகழ்வில் அனைத்து மக்களையும் கலந்து பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திருமலையில் பிரபல தென்னிந்திய கலைஞர்கள் பங்குபற்றும் மாபெரும் “கானமழை” -அனுமதி இலவசம். திருகோணமலை விடுதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சமூக கலை நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை திருகோணமலை பிரதான கடற்கரையில் இடம்பெறவுள்ளது. திருகோணமலை விடுதிகள் சங்கத்தின் தலைவர் குமார் ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு அனுமதி முற்றுமுழுதாக இலவசம் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இதில் மாபெரும் நிகழ்வில், சிறப்பு நிகழ்வாக இலங்கை இசைக் கலைஞர்களுடன் தமிழக இசைக் கலைஞர்களும் இணைந்து சிறப்பிக்கும் இன்னிசைத் திருவிழா, உணவுத் திருவிழா, மற்றும் கார்ணிவேல் என்பன இடம்பெறவுள்ளது.விசேடமாக இங்கு நடைபெறவுள்ள “கான மழை “ இசை நிகழ்வில் , “காசு பணம் துட்டு மணி மணி “ பாடல் பிரபலம் கானா பாலா உட்பட பல பல தென்னிந்திய இசைக் கலைஞர்களும் இணைந்து சிறப்பிக்கவுள்ளனர்.இந்த இன்னிசை நிகழ்வில் இந்தியாவின் எம் மியூசிக் மாரிக் விஜயின் இசைக் குழுவினரும் இணைந்து கொள்கின்றனர்.குறித்த நிகழ்வில் அனைத்து மக்களையும் கலந்து பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.