• Apr 30 2026

யாழின் முக்கிய பகுதியில் திடீரென கரையொதுங்கிய மர்ம படகால் பரபரப்பு...!samugammedia

Ziya / Jan 6th 2024, 12:41 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான படகு ஒன்று இன்று அதிகாலை கரையொதுங்கியுள்ளது.

படகில் காணப்படும் மீன்பிடி திணைக்களத்தின் பதிவு  இலக்கம் அழிக்கப்பட்டுக் காணப்படுவதால் குறித்த படகை  போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பாவித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலீஸார் மற்றும் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் பௌத்த கொடியுடன் மிதப்பு ஒன்றும், மூடிய கொள்கலன் ஒன்றும் சில தினங்களுக்கு முன்னர் கரை ஒதுங்கியது.

அதேவேளை நாகர்கோவில் பகுதியிலும் மரத்தினாலான மிதப்பு ஒன்றும் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


யாழின் முக்கிய பகுதியில் திடீரென கரையொதுங்கிய மர்ம படகால் பரபரப்பு.samugammedia யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான படகு ஒன்று இன்று அதிகாலை கரையொதுங்கியுள்ளது.படகில் காணப்படும் மீன்பிடி திணைக்களத்தின் பதிவு  இலக்கம் அழிக்கப்பட்டுக் காணப்படுவதால் குறித்த படகை  போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பாவித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலீஸார் மற்றும் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் பௌத்த கொடியுடன் மிதப்பு ஒன்றும், மூடிய கொள்கலன் ஒன்றும் சில தினங்களுக்கு முன்னர் கரை ஒதுங்கியது. அதேவேளை நாகர்கோவில் பகுதியிலும் மரத்தினாலான மிதப்பு ஒன்றும் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement