• Sep 20 2024

வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு வருகிறது புதிய சட்டம்!

Tharun / Jul 16th 2024, 6:54 pm
image

Advertisement

புதிய வரிகளை விதிக்கும் முன்னர், வரி ஏய்ப்பு செய்த மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிகளை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதற்காக, தற்போதைய சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு, இவ்வாறு வரி ஏய்ப்பு செய்பவர்களிடம் இருந்து வரியை வசூலிக்கும் தனித்துவமான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில்,

"ஏதேனும் ஒரு வழியில் வரி செலுத்துவதில் சிரமம் இருந்தால், அது குறித்து மேல்முறையீடு செய்யவும், நீதிமன்றத்தை நாடவும் அவர்களுக்கு உரிமை உண்டு. அவ்வாறு சிலரின் நீதிமன்ற நடவடிக்கைகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருவதால், நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைவதற்குள் அவர்கள் இறந்தும் விடுகின்றனர்.

மேலும், மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் நிகர வருமானம் உள்ளவர் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்றும், வேறு இடத்தில் வரி செலுத்தியிருந்தால், மீண்டும் வரி செலுத்த வேண்டியதில்லை. 

இது குறித்து பிராந்திய அலுவலகத்திற்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கவேண்டும். 

அத்துடன் வரி ஏய்ப்பு செய்பவர்களை பிடிப்பதற்கு வலுவான வலை போடப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள சட்டங்களை தகவல் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு வருகிறது புதிய சட்டம் புதிய வரிகளை விதிக்கும் முன்னர், வரி ஏய்ப்பு செய்த மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிகளை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இதற்காக, தற்போதைய சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு, இவ்வாறு வரி ஏய்ப்பு செய்பவர்களிடம் இருந்து வரியை வசூலிக்கும் தனித்துவமான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில்,"ஏதேனும் ஒரு வழியில் வரி செலுத்துவதில் சிரமம் இருந்தால், அது குறித்து மேல்முறையீடு செய்யவும், நீதிமன்றத்தை நாடவும் அவர்களுக்கு உரிமை உண்டு. அவ்வாறு சிலரின் நீதிமன்ற நடவடிக்கைகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருவதால், நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைவதற்குள் அவர்கள் இறந்தும் விடுகின்றனர்.மேலும், மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் நிகர வருமானம் உள்ளவர் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்றும், வேறு இடத்தில் வரி செலுத்தியிருந்தால், மீண்டும் வரி செலுத்த வேண்டியதில்லை. இது குறித்து பிராந்திய அலுவலகத்திற்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கவேண்டும். அத்துடன் வரி ஏய்ப்பு செய்பவர்களை பிடிப்பதற்கு வலுவான வலை போடப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள சட்டங்களை தகவல் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement