• Dec 02 2025

வீதியில் தொங்கிய மின்சார கம்பி மேல் விழுந்த பனைமரம் - போக்குவரத்துக்கு இடையூறு!

dileesiya / Dec 1st 2025, 10:51 am
image

வீதியில் மின்சார கம்பி    வீழ்ந்து தொங்கிய பனை மரத்தினை பாதுகாப்பான முறையில் இளைஞர்கள் அகற்றிய சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.


முல்லைத்தீவில் பெய்து வரும் கனமழை , பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்தது. 


இந்நிலையில் முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் மழையுடன் வீசிய காற்றில் காணி ஒன்றில் நின்ற பனைமரம் வீதிக்கு குறுக்காக மின் இணைப்பு கம்பியில் வீழ்ந்து தொங்கிய நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்துள்ளது.


இந்நிலையில் உடனடியாக விரைந்து செயற்பட்ட குமுழமுனை இளைஞர்கள் பாதுகாப்பான முறையில் வீழ்ந்த பனைமரத்தினை வெட்டி அகற்றியுள்ளனர்.



வீதியில் தொங்கிய மின்சார கம்பி மேல் விழுந்த பனைமரம் - போக்குவரத்துக்கு இடையூறு வீதியில் மின்சார கம்பி    வீழ்ந்து தொங்கிய பனை மரத்தினை பாதுகாப்பான முறையில் இளைஞர்கள் அகற்றிய சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவில் பெய்து வரும் கனமழை , பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்தது. இந்நிலையில் முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் மழையுடன் வீசிய காற்றில் காணி ஒன்றில் நின்ற பனைமரம் வீதிக்கு குறுக்காக மின் இணைப்பு கம்பியில் வீழ்ந்து தொங்கிய நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்துள்ளது.இந்நிலையில் உடனடியாக விரைந்து செயற்பட்ட குமுழமுனை இளைஞர்கள் பாதுகாப்பான முறையில் வீழ்ந்த பனைமரத்தினை வெட்டி அகற்றியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement