• Jan 13 2026

அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற நபர்!

dileesiya / Jan 12th 2026, 5:10 pm
image

நொய்டா அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், லிஃப்ட்டில் ஏறியபோது 75 வயது மூதாட்டியின் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற நபர், மூதாட்டியின் அலறல் சத்தத்தால் அங்கிருந்து தப்பியோடினார். 

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிரேட்டர் நொய்டா மேற்கில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில்   லிஃப்ட்டுக்குள் இருந்த 75 வயது மூதாட்டியின் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற இளைஞன், அவர் அலறியதை அடுத்து அங்கிருந்து தப்பியோடினான்.

சிசிடிவி கேமராவில் பதிவான அந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

லா ரெசிடென்சி சொசைட்டியில், வழக்கம்போல மாலை நேர நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு தனது பிளாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த மூதாட்டி, தரைத்தளத்தில் இருந்து லிஃப்ட்டில் ஏறினார். 

அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், அவருடன் லிஃப்ட்டுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

லிஃப்ட் நகரத் தொடங்கிய சில நொடிகளிலேயே, அந்த நபர் திடீரென அவரது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றார்.

எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாக அலறினார்.

 அவரது அலறல் சத்தம் கேட்டதும், அந்த நபர் தனது முயற்சியை கைவிட்டு லிஃப்ட்டில் இருந்து வெளியே தப்பியோடினான். இதனால் அந்தப் பெண், காயம் ஏதுமின்றி தப்பியிருந்தாலும், மன அதிர்ச்சியில் ஆழ்ந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்

அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற நபர் நொய்டா அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், லிஃப்ட்டில் ஏறியபோது 75 வயது மூதாட்டியின் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற நபர், மூதாட்டியின் அலறல் சத்தத்தால் அங்கிருந்து தப்பியோடினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கிரேட்டர் நொய்டா மேற்கில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில்   லிஃப்ட்டுக்குள் இருந்த 75 வயது மூதாட்டியின் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற இளைஞன், அவர் அலறியதை அடுத்து அங்கிருந்து தப்பியோடினான்.சிசிடிவி கேமராவில் பதிவான அந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.லா ரெசிடென்சி சொசைட்டியில், வழக்கம்போல மாலை நேர நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு தனது பிளாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த மூதாட்டி, தரைத்தளத்தில் இருந்து லிஃப்ட்டில் ஏறினார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், அவருடன் லிஃப்ட்டுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.லிஃப்ட் நகரத் தொடங்கிய சில நொடிகளிலேயே, அந்த நபர் திடீரென அவரது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றார்.எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாக அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டதும், அந்த நபர் தனது முயற்சியை கைவிட்டு லிஃப்ட்டில் இருந்து வெளியே தப்பியோடினான். இதனால் அந்தப் பெண், காயம் ஏதுமின்றி தப்பியிருந்தாலும், மன அதிர்ச்சியில் ஆழ்ந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்

Advertisement

Advertisement

Advertisement