நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னலுக்கும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
எனவே மழை, மின்னல் மற்றும் காற்று உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
டித்வா அனர்த்தத்திற்குப் பின்னர் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதுடன் பலத்த காற்றும் வீசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை; பலத்த மின்னலுக்கும் வாய்ப்பு நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னலுக்கும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். எனவே மழை, மின்னல் மற்றும் காற்று உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.டித்வா அனர்த்தத்திற்குப் பின்னர் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதுடன் பலத்த காற்றும் வீசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.