• Jan 13 2026

பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட்டை விண்ணில் ஏவிய இந்தியா; புத்தாண்டின் முதல் பயணத்தில் தோல்வி கண்ட இஸ்ரோ!

shanuja / Jan 12th 2026, 3:28 pm
image

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் பயணம் தோல்வியடைந்துள்ளது.


ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது.


2026ஆம் புத்தாண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ரொக்கெட்டாகும். இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. 


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்  தயாரித்துள்ள பாதுகாப்புத் துறை பயன்பாட்டுக்கான இஓஎஸ்-என் 1 எனும் அதிநவீன செயற்கைக்கோளும் ஏவப்பட்டுள்ளது.


பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.18 மணியளவில் 16 செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்  ஏவியுள்ளது.


இஓஎஸ்-என் 1  செயற்கைக்கோளுடன் இந்திய மற்றும் வெளிநாடுகளுக்குச் சொந்தமான 15 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.


முதன்மைச் செயற்கைக்கோளான இஓஎஸ்-என் 1, தரையில் இருந்து 505 கி.மீ. தொலைவு கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. 


இந்த நிலையில், பி.எஸ்.எல்.வி சி 62 ரொக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். 


மேலும், இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பிஎஸ்எல்வி-சி62 திட்டத்தின் 3வது நிலையின் முடிவில் ஒரு தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டது. இது குறித்து விரிவான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட்டை விண்ணில் ஏவிய இந்தியா; புத்தாண்டின் முதல் பயணத்தில் தோல்வி கண்ட இஸ்ரோ ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் பயணம் தோல்வியடைந்துள்ளது.ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது.2026ஆம் புத்தாண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ரொக்கெட்டாகும். இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்  தயாரித்துள்ள பாதுகாப்புத் துறை பயன்பாட்டுக்கான இஓஎஸ்-என் 1 எனும் அதிநவீன செயற்கைக்கோளும் ஏவப்பட்டுள்ளது.பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.18 மணியளவில் 16 செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்  ஏவியுள்ளது.இஓஎஸ்-என் 1  செயற்கைக்கோளுடன் இந்திய மற்றும் வெளிநாடுகளுக்குச் சொந்தமான 15 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.முதன்மைச் செயற்கைக்கோளான இஓஎஸ்-என் 1, தரையில் இருந்து 505 கி.மீ. தொலைவு கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், பி.எஸ்.எல்.வி சி 62 ரொக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பிஎஸ்எல்வி-சி62 திட்டத்தின் 3வது நிலையின் முடிவில் ஒரு தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டது. இது குறித்து விரிவான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement