• Aug 29 2025

ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்!

Chithra / Aug 29th 2025, 10:51 am
image

 

பதுளை - பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்த நபர் ஒருவர் அதே ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி - பிலிமத்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த பொடி மெணிக்கே ரயிலில் பயணித்துள்ள நிலையில்,  பண்டாரவளை ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்துவதற்கு முன்னரே ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்ற போது, கீழே தவறி விழுந்து அதே ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவரின் சடலம் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்  பதுளை - பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்த நபர் ஒருவர் அதே ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கண்டி - பிலிமத்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவர் கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த பொடி மெணிக்கே ரயிலில் பயணித்துள்ள நிலையில்,  பண்டாரவளை ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்துவதற்கு முன்னரே ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்ற போது, கீழே தவறி விழுந்து அதே ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement