வீடொன்றில் இரு தரப்பினரிடையே இடம்பெற்ற தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் மாத்தளை, பலாபத்வல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மாத்தளை, பலாபத்வல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
குறித்த பகுதியிலுள்ள வீடொன்றிற்கு நான்கு பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்றுள்ளனர். அங்கு குறித்த குழுவினரிற்கும் வீட்டாருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வாய்த்தர்க்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து நபரொருவர் அருகிலிருந்த கூர்மையான ஆயுதத்தால் குழுவிலிருந்த ஒருவரின் கழுத்தில் தாக்கியுள்ளார். அத்துடன் மற்றொரு நபரையும் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.
இதில் கூரிய ஆயுததத்தால் கழுத்தில் தாக்கப்பட்ட இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதனையடுத்து கொலைக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டுக்குச் சென்ற குழுவினரிடையே ஏற்பட்ட தகராறில் நபரொருவர் கொலை வீடொன்றில் இரு தரப்பினரிடையே இடம்பெற்ற தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மாத்தளை, பலாபத்வல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மாத்தளை, பலாபத்வல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் ஆவார். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், குறித்த பகுதியிலுள்ள வீடொன்றிற்கு நான்கு பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்றுள்ளனர். அங்கு குறித்த குழுவினரிற்கும் வீட்டாருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து நபரொருவர் அருகிலிருந்த கூர்மையான ஆயுதத்தால் குழுவிலிருந்த ஒருவரின் கழுத்தில் தாக்கியுள்ளார். அத்துடன் மற்றொரு நபரையும் வெட்டி காயப்படுத்தியுள்ளார். சம்பவத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்தவர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கூரிய ஆயுததத்தால் கழுத்தில் தாக்கப்பட்ட இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதனையடுத்து கொலைக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.