• Dec 20 2024

நிந்தவூர் பகுதியில் போதைப்பொருளை விநியோகித்து வந்த நபர் கைது..!

Sharmi / Dec 20th 2024, 11:56 am
image

ஐஸ் போதைப் பொருளுடன்  மல்வத்தை  விசேட அதிரடிப் படையினரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சட்ட நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை நிந்தவூர் பொலிஸ் பிரிவில் உள்ள புற நகர் பகுதி ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக கடந்த புதன்கிழமை(19) இரவு நடமாடிய 34 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை சோதனை செய்த விசேட அதிரடிப்படையினர், 2 மில்லி 450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

இதன் போது நீண்ட காலமாக குறித்த சந்தேக நபர் இப்பகுதியில் இப்போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளதுடன் அப்போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த அவுலியா வீதி நிந்தவூர் 23 பிரிவினை சேர்ந்தவர் என்பதுடன் கைதான நிலையில் சான்று பொருட்களுடன் நிந்தவூர் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிந்தவூர் பகுதியில் போதைப்பொருளை விநியோகித்து வந்த நபர் கைது. ஐஸ் போதைப் பொருளுடன்  மல்வத்தை  விசேட அதிரடிப் படையினரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சட்ட நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.அம்பாறை நிந்தவூர் பொலிஸ் பிரிவில் உள்ள புற நகர் பகுதி ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக கடந்த புதன்கிழமை(19) இரவு நடமாடிய 34 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை சோதனை செய்த விசேட அதிரடிப்படையினர், 2 மில்லி 450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.இதன் போது நீண்ட காலமாக குறித்த சந்தேக நபர் இப்பகுதியில் இப்போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளதுடன் அப்போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.குறித்த அவுலியா வீதி நிந்தவூர் 23 பிரிவினை சேர்ந்தவர் என்பதுடன் கைதான நிலையில் சான்று பொருட்களுடன் நிந்தவூர் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement