• Nov 23 2024

தொண்டையில் சிக்கி கொண்ட இறைச்சி துண்டு : டூத் பிரஷை விழுங்கிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! samugammedia

Tamil nila / Dec 9th 2023, 6:18 am
image

தனது தொண்டையில் சிக்கி கொண்ட இறைச்சி துண்டை எடுப்பதற்காக இளம்பெண் ஒருவர் டூத் பிரஷை பயன்படுத்திய போது தவறுதலாக அதனை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது 

ஸ்பெயின் நாட்டின் கால்டாகாவோ பகுதியை சேர்ந்த ஹீசியா என்ற இளம் பெண், தனது வீட்டில் வான்கோழியை சமைத்து சாப்பிட்டுள்ளார்.

அப்போது இறைச்சி துண்டு ஒன்று அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டதை அடுத்து அதை எடுக்க அருகில் இருந்த டூத் பிரஷை பயன்படுத்தியுள்ளார்.

ஆனால் துரதிஷ்டவசமாக ஹீசியா பயன்படுத்திய டூத் பிரஷ் கையிலிருந்து நழுவி அவரது தொண்டை குழிக்குள் சிக்கியுள்ளது.

ஹீசியாவின் தந்தை குதிகால் தசைநார் பாதிப்பு ஏற்பட்டு சக்கர நாற்காலியில் இருந்து எழும்ப முடியாத நிலையில் இருப்பதால் அவரசமாக உதவி செய்யும் அளவிற்கு அருகில் யாரும் இல்லாத நிலையில் மூச்சு விட மிகவும் சிரமப்பட்டு உள்ளார் ஹீசியா.

இதில் நல்ல வேளையாக அவருக்கு வலி எதுவும் ஏற்படாததை தொடர்ந்து இறுதியில் தானே மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்தவர்களிடம் விவரத்தை முழுமையாக எடுத்துரைத்துள்ளார்.

ஹீசியா கூறியதை முதலில் முழுமையாக நம்பாத மருத்துவமனை ஊழியர்கள், எக்ஸ்ரே எடுத்த பிறகு தான் ஹீசியா சொன்னதை முழுமையாக நம்பியுள்ளனர்.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஹீசியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இறுதியில் 40 நிமிட சிகிச்சைக்கு பிறகு அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல் டூத் பிரஷை உணவு குழாய் வழியாக வெளியே எடுத்துள்ளனர்.

இதற்கமைய அடுத்த நாள் ஹீசியா மருத்துவமனையின் படுக்கையில் இருந்து எழுந்த போது அவருக்கு அருகில் மேசையில் அந்த டூத் பிரஷ் இருந்தது என்றும், தற்போது தன்னால் நன்றாக மூச்சு விட முடிவதாகவும் ஹீசியா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தொண்டையில் சிக்கி கொண்ட இறைச்சி துண்டு : டூத் பிரஷை விழுங்கிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் samugammedia தனது தொண்டையில் சிக்கி கொண்ட இறைச்சி துண்டை எடுப்பதற்காக இளம்பெண் ஒருவர் டூத் பிரஷை பயன்படுத்திய போது தவறுதலாக அதனை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ஸ்பெயின் நாட்டின் கால்டாகாவோ பகுதியை சேர்ந்த ஹீசியா என்ற இளம் பெண், தனது வீட்டில் வான்கோழியை சமைத்து சாப்பிட்டுள்ளார்.அப்போது இறைச்சி துண்டு ஒன்று அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டதை அடுத்து அதை எடுக்க அருகில் இருந்த டூத் பிரஷை பயன்படுத்தியுள்ளார்.ஆனால் துரதிஷ்டவசமாக ஹீசியா பயன்படுத்திய டூத் பிரஷ் கையிலிருந்து நழுவி அவரது தொண்டை குழிக்குள் சிக்கியுள்ளது.ஹீசியாவின் தந்தை குதிகால் தசைநார் பாதிப்பு ஏற்பட்டு சக்கர நாற்காலியில் இருந்து எழும்ப முடியாத நிலையில் இருப்பதால் அவரசமாக உதவி செய்யும் அளவிற்கு அருகில் யாரும் இல்லாத நிலையில் மூச்சு விட மிகவும் சிரமப்பட்டு உள்ளார் ஹீசியா.இதில் நல்ல வேளையாக அவருக்கு வலி எதுவும் ஏற்படாததை தொடர்ந்து இறுதியில் தானே மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்தவர்களிடம் விவரத்தை முழுமையாக எடுத்துரைத்துள்ளார்.ஹீசியா கூறியதை முதலில் முழுமையாக நம்பாத மருத்துவமனை ஊழியர்கள், எக்ஸ்ரே எடுத்த பிறகு தான் ஹீசியா சொன்னதை முழுமையாக நம்பியுள்ளனர்.கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஹீசியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இறுதியில் 40 நிமிட சிகிச்சைக்கு பிறகு அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல் டூத் பிரஷை உணவு குழாய் வழியாக வெளியே எடுத்துள்ளனர்.இதற்கமைய அடுத்த நாள் ஹீசியா மருத்துவமனையின் படுக்கையில் இருந்து எழுந்த போது அவருக்கு அருகில் மேசையில் அந்த டூத் பிரஷ் இருந்தது என்றும், தற்போது தன்னால் நன்றாக மூச்சு விட முடிவதாகவும் ஹீசியா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement