பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பாடசாலை மற்றும் கல்லூரி வளாகத்தில் பங்களாதேஷ் விமானப்படையின் F-7 BGI பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து நேற்று பிற்பகல் 1:06 மணியளவில் நிகழ்ந்தது.
உத்தரா என்ற இடத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானம் மைல்ஸ்டோன் பாடசாலை மற்றும் கல்லூரி வளாகத்தில் நொறுங்கி விழுந்து தீப்பற்றி எரிந்தது.
விமான விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
விமானம் புறப்பட்ட உடனேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.
ஆனால் விபத்தின் சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மைல்ஸ்டோன் பாடசாலை மற்றும் கல்லூரியில் சுமார் 2,000 மாணவர்கள் பயில்கின்றனர்.
மழலையர் பிரிவு முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. விபத்து நடந்தபோது மாணவர்கள் வகுப்புகளில் இருந்தனர்.
பங்களாதேஷின் இடைக்கால அரசுத் தலைவர் முஹம்மது யூனுஸ் இந்த விபத்தை “பேரழிவு” என்று வர்ணித்து, விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு உதவி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
பாடசாலை வளாகத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்; பலியான பாலகர்கள்; அதிகரித்த உயிரிழப்பு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பாடசாலை மற்றும் கல்லூரி வளாகத்தில் பங்களாதேஷ் விமானப்படையின் F-7 BGI பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து நேற்று பிற்பகல் 1:06 மணியளவில் நிகழ்ந்தது. உத்தரா என்ற இடத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானம் மைல்ஸ்டோன் பாடசாலை மற்றும் கல்லூரி வளாகத்தில் நொறுங்கி விழுந்து தீப்பற்றி எரிந்தது. விமான விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். விமானம் புறப்பட்ட உடனேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால் விபத்தின் சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மைல்ஸ்டோன் பாடசாலை மற்றும் கல்லூரியில் சுமார் 2,000 மாணவர்கள் பயில்கின்றனர். மழலையர் பிரிவு முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. விபத்து நடந்தபோது மாணவர்கள் வகுப்புகளில் இருந்தனர். பங்களாதேஷின் இடைக்கால அரசுத் தலைவர் முஹம்மது யூனுஸ் இந்த விபத்தை “பேரழிவு” என்று வர்ணித்து, விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு உதவி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.