எதிர்காலத்தில் தேர்தல்களுக்கு முன் தினத்தில் ஊடகவியலாளர்கள் வாக்களிப்பதற்காக சட்ட திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுவருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.
புத்தளம் மாவட்ட செலகத்தில் நேற்று (21) இடம் பெற்ற தேர்தல் ஆணையகத்தின் 2026 -2029 கால மூலோபாயத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பான ஆலோசனைகள் பெறுவதற்கான பல்துறை சார்ந்தவர்களின் பங்களிப்பில் இடம் பெற்ற கூட்டத்தில் மேற்கண்டவாறு கூறினார்.
குறித்த செயலமர்வில் தேர்தல்கள் ஆணையாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நான்கு பிரதான அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை தேர்தல் ஆணையகம் முன்னெடுத்துவருகின்றது.
குறிப்பாக மக்களுக்கு உயிரோட்டமுள்ள தெளிவுபடுத்தல்,சட்ட திருத்தம்,நிறுவன ரீதியான மீளாய்வு,மற்றும் நவீன தொழில நுட்ப அறிமுகம் என்ற விடயங்கள் தொடர்பில் பல்துறையாளர்களின் கருத்துக்களை பெறுவது இதனது நோக்கமாகும்.
ஊடகவியளாலர்கள் தொடர்பில் பல்வேறு கோறிக்கைகள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதையடுத்து அதி கூடிய கவனம் செலுத்தபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை தங்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் ஒரு வாரத்துக்குள் தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு இதன் போது அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது.
தேர்தலுக்கு முதல் நாள் ஊடகவியலாளர்களுக்கு வாக்களிக்கும் வசதி - தேர்தல்கள் ஆணைக்குவின் அறிவப்பு எதிர்காலத்தில் தேர்தல்களுக்கு முன் தினத்தில் ஊடகவியலாளர்கள் வாக்களிப்பதற்காக சட்ட திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுவருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.புத்தளம் மாவட்ட செலகத்தில் நேற்று (21) இடம் பெற்ற தேர்தல் ஆணையகத்தின் 2026 -2029 கால மூலோபாயத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பான ஆலோசனைகள் பெறுவதற்கான பல்துறை சார்ந்தவர்களின் பங்களிப்பில் இடம் பெற்ற கூட்டத்தில் மேற்கண்டவாறு கூறினார்.குறித்த செயலமர்வில் தேர்தல்கள் ஆணையாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,நான்கு பிரதான அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை தேர்தல் ஆணையகம் முன்னெடுத்துவருகின்றது.குறிப்பாக மக்களுக்கு உயிரோட்டமுள்ள தெளிவுபடுத்தல்,சட்ட திருத்தம்,நிறுவன ரீதியான மீளாய்வு,மற்றும் நவீன தொழில நுட்ப அறிமுகம் என்ற விடயங்கள் தொடர்பில் பல்துறையாளர்களின் கருத்துக்களை பெறுவது இதனது நோக்கமாகும்.ஊடகவியளாலர்கள் தொடர்பில் பல்வேறு கோறிக்கைகள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதையடுத்து அதி கூடிய கவனம் செலுத்தபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இதேவேளை தங்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் ஒரு வாரத்துக்குள் தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு இதன் போது அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது.