தமிழ் பேசும் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தார். அவர் அரசியல் பழிவாங்கலின் மூலம் வேறு இடத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - போரதீவுபற்று பிரதேச சபை இரண்டாவது சபை அமர்வு செவ்வாய்கிழமை(22.07.2025) தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் பின்வரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பாலையடிவட்டையில் முன்னர் பொதுச்சந்தை அமைந்திருந்த இடத்தில் தற்போது இலங்கை இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர். அந்த இராணுவ முகாம் அகற்றப்பட வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் அகழப்பட்டு வரும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும். பிரதேச சபையில் சுகாதார ஊழியர்களாக கடமையாற்றுகிறவர்களை அத்தொழிலைச் செய்வதற்குஉரிய செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
வீதிகளுக்கு மின்விளக்கு பொருத்துதல், எல்லைப் பகுதிக்கு அரசாங்கம் யானை பாதுகாப்பு வேலைகளை அமைக்க வேண்டும். சனசமூக நிலையங்களை வலுவூட்டுதல், பிரதேச சபையில் பழுதடைந்திருக்கின்ற வாகனங்களைத் திருத்தியமைத்தல். பிரதேச சபையின் வருமானத்தை அதிகரித்தல், நூலகங்களை அபிவிருத்தி செய்தல் போன்ற பல தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.
தமிழ் பொலிஸ் அதிகாரியின் இடமாற்றத்தை வன்மையாக கண்டிக்கிறேன் - போரதீவுப்பற்றுப் பிரதேச சபை தவிசாளர் தமிழ் பேசும் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தார். அவர் அரசியல் பழிவாங்கலின் மூலம் வேறு இடத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு - போரதீவுபற்று பிரதேச சபை இரண்டாவது சபை அமர்வு செவ்வாய்கிழமை(22.07.2025) தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் பின்வரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பாலையடிவட்டையில் முன்னர் பொதுச்சந்தை அமைந்திருந்த இடத்தில் தற்போது இலங்கை இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர். அந்த இராணுவ முகாம் அகற்றப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் அகழப்பட்டு வரும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும். பிரதேச சபையில் சுகாதார ஊழியர்களாக கடமையாற்றுகிறவர்களை அத்தொழிலைச் செய்வதற்குஉரிய செயற்பாடுகளை முன்னெடுத்தல்.வீதிகளுக்கு மின்விளக்கு பொருத்துதல், எல்லைப் பகுதிக்கு அரசாங்கம் யானை பாதுகாப்பு வேலைகளை அமைக்க வேண்டும். சனசமூக நிலையங்களை வலுவூட்டுதல், பிரதேச சபையில் பழுதடைந்திருக்கின்ற வாகனங்களைத் திருத்தியமைத்தல். பிரதேச சபையின் வருமானத்தை அதிகரித்தல், நூலகங்களை அபிவிருத்தி செய்தல் போன்ற பல தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.