• Jul 23 2025

வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினால் பொது மக்கள் முறைப்பாட்டு இலக்கம்!

shanuja / Jul 22nd 2025, 4:53 pm
image

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் பொது மக்கள் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


அறிமுகப்படுத்தப்பட்ட இலக்கத்தினை கொண்ட விழிப்புணர்வு பிரசுரத்தில், முறைப்பாட்டு இலக்கம்  பேருந்துகளில் ஒட்டும் பணி கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டது. 


ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய பொது போக்குவரத்தின் போது பொது மக்களுக்கான அசெளகரியங்கள் இடர்பாடுகளை முறையிடுவதற்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கட்டமைப்பில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.   


வடமாகாணத்தில் பொது மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை முறையிடுவதற்கான இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பேருந்துகளில் ஒட்டும் பணிகள் கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டது. 


தொடர்ந்து ஏனைய நான்கு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த செயற்பாடு கிளிநொச்சி பேருந்து நிலைய பொறுப்பதிகாரி ஈஸ்வரதேவன் கோபிதன் தலைமையில் நடைபெற்றது. அவரோடு மாவட்ட பதில் அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் கலந்து கொண்டிருந்தார்.

வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினால் பொது மக்கள் முறைப்பாட்டு இலக்கம் வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் பொது மக்கள் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட இலக்கத்தினை கொண்ட விழிப்புணர்வு பிரசுரத்தில், முறைப்பாட்டு இலக்கம்  பேருந்துகளில் ஒட்டும் பணி கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய பொது போக்குவரத்தின் போது பொது மக்களுக்கான அசெளகரியங்கள் இடர்பாடுகளை முறையிடுவதற்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கட்டமைப்பில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.   வடமாகாணத்தில் பொது மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை முறையிடுவதற்கான இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பேருந்துகளில் ஒட்டும் பணிகள் கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து ஏனைய நான்கு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த செயற்பாடு கிளிநொச்சி பேருந்து நிலைய பொறுப்பதிகாரி ஈஸ்வரதேவன் கோபிதன் தலைமையில் நடைபெற்றது. அவரோடு மாவட்ட பதில் அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் கலந்து கொண்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement