• Jul 23 2025

கொழும்பில் போராட்டத்தில் இறங்கிய மின்சார சபை ஊழியர்கள்;கடும் போக்குவரத்து நெரிசல்

Chithra / Jul 22nd 2025, 4:41 pm
image

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கொழும்பில் இன்று  போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இப் போராட்டம் இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

உத்தேச மின்சார சபைத் திருத்தச் சட்டத்தைக் கைவிடுமாறும் மின்சார சபையின் தொழிற்சங்கப் பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், அரசாங்கமும் மின்சார சபையும் தமது அடிப்படை உரிமைகளை பறித்துள்ளதுடன், தொழிலாளர்களுக்குரிய அடிப்படை வசதிகள் இல்லாமல் செய்து வருகின்றது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்

மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் காரணமாக பேஸ்லைன் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


கொழும்பில் போராட்டத்தில் இறங்கிய மின்சார சபை ஊழியர்கள்;கடும் போக்குவரத்து நெரிசல் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கொழும்பில் இன்று  போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.இப் போராட்டம் இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.உத்தேச மின்சார சபைத் திருத்தச் சட்டத்தைக் கைவிடுமாறும் மின்சார சபையின் தொழிற்சங்கப் பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அத்துடன், அரசாங்கமும் மின்சார சபையும் தமது அடிப்படை உரிமைகளை பறித்துள்ளதுடன், தொழிலாளர்களுக்குரிய அடிப்படை வசதிகள் இல்லாமல் செய்து வருகின்றது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் காரணமாக பேஸ்லைன் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement