• Jul 22 2025

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி

Chithra / Jul 22nd 2025, 3:46 pm
image

 

 

1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டமூலத்தை அங்கீகாரத்துக்காக நடாளுமன்றத்தில சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது  

  முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற விசேட சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக 2025.06.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த பணிகளுக்காக சட்டவரைஞரால் ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

அதன்படி, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி   1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டமூலத்தை அங்கீகாரத்துக்காக நடாளுமன்றத்தில சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது    முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற விசேட சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக 2025.06.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.அதற்கமைய குறித்த பணிகளுக்காக சட்டவரைஞரால் ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.அதன்படி, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement