பூச்சிகள் கலந்த உணவுகளை விற்பனை செய்ததாக கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உணவகமொன்றின் உரிமையாளருக்கு எதிராக 75 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து மாளிகாக்கந்த நீதவான் லொசனா அபேவிக்ரம வீரசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த உணவக உரிமையாளருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனையையும் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நுகர்வோருக்கு 60 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உணவக உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உணவகமொன்றில் வாங்கிய உணவில் பூச்சிகள் கலந்திருப்பதாக கொழும்பு கொள்ளுப்பிட்டி பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த உணவகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த உணவக உரிமையாளர், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பூச்சிகள் கலந்த உணவுகள் விற்பனை – உணவக உரிமையாளருக்கு நீதிமன்றின் உத்தவு பூச்சிகள் கலந்த உணவுகளை விற்பனை செய்ததாக கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உணவகமொன்றின் உரிமையாளருக்கு எதிராக 75 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து மாளிகாக்கந்த நீதவான் லொசனா அபேவிக்ரம வீரசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.குறித்த உணவக உரிமையாளருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனையையும் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.நுகர்வோருக்கு 60 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உணவக உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உணவகமொன்றில் வாங்கிய உணவில் பூச்சிகள் கலந்திருப்பதாக கொழும்பு கொள்ளுப்பிட்டி பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த உணவகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த உணவக உரிமையாளர், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.