• Jul 22 2025

எல்லை தாண்டிய இராமேஸ்வர மீனவர்கள் நால்வர் கைது!

Chithra / Jul 22nd 2025, 12:40 pm
image


 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களே மீன்பிடிப்படகு ஒன்றுடன் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து  நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், குறித்த படகையும் அதிலிருந்த நான்கு மீனவர்களையும் கைது செய்து மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஆரம்பகட்ட விசாரணையை முடித்துக் கொண்டு மீனவர்கள் நான்கு பேரையும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை  இராமேஸ்வரத்தை சேர்ந்த 25 மீன்பிடிப்படகுகளும் 185 மீனவர்களும்  இலங்கை  கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எல்லை தாண்டிய இராமேஸ்வர மீனவர்கள் நால்வர் கைது  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களே மீன்பிடிப்படகு ஒன்றுடன் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து  நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், குறித்த படகையும் அதிலிருந்த நான்கு மீனவர்களையும் கைது செய்து மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.இந்நிலையில், ஆரம்பகட்ட விசாரணையை முடித்துக் கொண்டு மீனவர்கள் நான்கு பேரையும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.இதேவேளை, இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை  இராமேஸ்வரத்தை சேர்ந்த 25 மீன்பிடிப்படகுகளும் 185 மீனவர்களும்  இலங்கை  கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement